மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் மரபாலம் அமைக்கப்பட்டது இரண்டு வாரங்களுக்கு முன் இதனை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மாண்டஸ் புயல் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட இந்த மரபாலம் சேதமடைந்துள்ளது இதனால் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரம் மற்றும் காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க 263 மீட்டர் நீளத்துக்கு மரத்தால் ஆன பாலம் அமைக்கப்பட்டு கடலில் இருந்து 20 மீட்டர் முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

கடலை ஒட்டிய இந்த மேடை பகுதி பெருமளவு சேதமடைந்துள்ள நிலையில் நடைபாதை பாலத்தின் சில இடங்களிலும் சேதமடைந்துள்ளது.

ரூ. 1.15 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலம் சேதமடைந்தது குறித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வின் போது செய்தியாளரிடம் பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரி இந்த மரபாலம் அமைக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இது செயல்பாட்டுக்கு வரும் குறிப்பிட்ட காலத்துக்குள் சேதம் ஏற்பட்டால் அதனை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த காலக்கெடு இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில் இதற்கான முழுச்செலவையும் ஒப்பந்ததாரர் ஏற்றுக்கொண்டு இதனை மீண்டும் சரிசெய்ய தேவையான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்த அவர் இந்த மரபாலத்தின் நீளத்தை 20 மீட்டர் அளவுக்கு குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ரூ.1.14 கோடியில் அமைக்கப்பட்டு உதயநிதியால் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம்…..!