ஆசிய கிரிக்கெட்: இந்திய அணியில் விராட் கோலி இல்லாததால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கவலை

துபாய்:

ஆசிய கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி இடம்பெறாததால் வருவாய் பாதிக்கும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கவலை அடைந்துள்ளது.

ஐக்கிய அரசு அமீரகத்தில் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் விராட் கோலி இடம்பெறவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் ராகுல் ஜோக்ரி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் துஷ்கித் பெராரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் மூத்த நிர்வாகி சுனில் மனோகரன் ஆகியோர் இடையே நடந்த இமெயில் பரிமாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ம் தேதி மனோகரன் அனுப்பியுள்ள மெயிலில்,‘‘ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பெறாதது தெரியவந்துள்ளது. எங்களது 2017ம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்பந்தப்படி இதில் கலந்துகொள்ளும் அணிகளில் சிறந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவார்கள் என்றும் பல அறிவிப்புகள் வெளியானது.

சிறந்த வீரரான விராட் கோலி இந்த போட்டியில் இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். போட்டி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு விராட் கோலி சேர்க்கப்படாத அறிவிப்பு வெளியானது. இதனால் இந்த போட்டியின் மூலம் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கும்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பிசிசிஐ தலைவர் ஜோக்ரி அளித்த பதிலில்,,‘‘முன்னார் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட சிறந்த வல்லுனர்களை கொண்ட குழு அணி வீரர்களை தேர்வு செய்கிறது. இது பிசிசிஐ குழு அதிகாரத்திற்கு உட்பட்டது. அதனால் இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ அல்லது கிரிககெட் ஒளிரப்பு நிறுவனமோக தலையிட்டு முடிவு செய்ய முடியாது. தேர்வு குழு சிறந்த அணியை தேர்வு செய்து வழங்கியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Star Sports upset with Virat Kohli not playing Asia Cup cricket