ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், மாணவர்கள் போராட்டம்!

Must read

சென்னை,

ந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்பை பதிவு செய்ய தகுதி தேர்வு எழுத வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை எதிர்த்து இன்று காலை முதல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

எம்.பி.பி.எஸ் பதிவுக்கு தேசிய தகுதித் தேர்வு எழுதுவதை கட்டாமாக்குவதை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைக்கு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக புறநோயாளிகள் பிரிவுக்கு  சிகிச்சைக்க வந்துள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More articles

Latest article