பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி: மதுரையில் கம்யூ.வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

Must read

மதுரை:

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால், அது மதுரைக்கு பெருமை சேர்க்கும் என்றவர், தமிழகத்தில் நடக்கும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் கூறினார்.

மதுரையில் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர், மதுரை லோக்சபா  தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,  இதே மதுரை ஜான்சிராணி பூங்காவில்தான் 28 ஆண்டுகளுக்கு முன் திமுகவின்  இளைஞரணியை கருணாநிதி தொடங்கி வைத்தார் என்பதை நினைவு கூர்ந்ம்தார்.

பெருமைக்குரிய மதுரையிலிருந்து வெங்கடேசனுக்காக வாக்கு கேட்கிறேன்., மன்னனிடம் நீதிகேட்டுப் போராடிய கண்ணகி வாழ்ந்த மதுரையிலிருந்து  வாக்கு கேட்கிறேன். மதுரையை மையமாக வைத்து காவல் கோட்டம் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்றவர் நமது வேட்பாளர், . தமிழ்ப் பண்பாட்டை தன் எழுத்தில் படைப்பவர், அவருடைய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை எழுதிய பெருமைக்கு உரியவர, நமது மண்ணையும், மக்களையும் அறிந்த சு.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அவர்களை நீங்கள் நாடாளு மன்றத்துக்கு அனுப்ப அவேண்டும்… நீங்கள் அனுப்பி வைத்தால், அது மதுரைக்கு பெருமையை சேர்க்கும் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதை அறிந்தே, மதுரைக்கு வந்து மோடி, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டினார்… அதோடு சரி… அதற்காக ஒரு சிறுஅளவு கூட நிதி ஒதுக்க வில்லை… மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் இதே நிலைதான் உள்ளது என்று பேசினார். மோடியின் கார்ப்பரேட் ஆட்சி ஒழியும் நாள் நெருங்கி உள்ளதாக கூறியவர், தமிழகத்திலும் கேவலமான அரசு  உள்ளது. இந்த அரசும் விரைவில் ஒழியும்-… பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள், தற்போதுகூட ஒரு சிறுமி கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்… ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்க சிறப்பாக இருப்பதாக எடப்பாடி கூறி வருகிறார்… தமிழ்நாட்டில் நடப்பது  பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More articles

Latest article