விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தை எட்ட உள்ளது. பலி எண்ணிக்கையும் குறையவில்லை.
பல மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து உள்ளது. பாதிப்பின் அளவை பொறுத்து, அந்தந்த மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 28 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தளர்வுகளின்றி முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதாக துணை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பால் விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் அவர் அந்த உத்தரவில் கூறி உள்ளார்.