வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்…

Must read

நாகை: இலங்கை கடற்கொள்ளையர்களால்  3 மீனவர்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ள jதகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும், கைது செய்யப்படுவதும், தமிழக மீனவர்களின் படகுகளை மூழ்கடித்து நாசம் செய்து, பேரிழப்பை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

நாகை மாவட்டம் கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய தகவல் வெளியான நிலையில், தற்போது,  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோடிக்கரை பகுதிக்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அந்த பகுதியில்  நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  தமிழ்க மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அத்துடன், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி போன்றவைகளையும் கொள்ளையடித்து உள்ளதுடன், அந்த படகில் இருந்த 8 மீனவர்களையும்  தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

More articles

Latest article