மதுரை: தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்த காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை எனப்படுகிறது. இது புரட்டாசி மகளாய அமாவாசையை போன்று முதாதைர்கள் வணங்க ஏதுவான நாளாகும்.  தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமான நடவடிக்கை. ஆனால், மறைந்த  முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கும் நாள்கிளல் தை அமாவாசையும் சிறந்தது. தை அமாவாசையையட்டி ஏராளமானோர் ராமேஷ்வரம், காசிக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வணங்குவர்.

இதன் காரணமாக, தை அமாவாசை அன்று காசிக்கு சென்று முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்யும் பொதுமக்களுக்கு வசதியாக  தெற்கு ரயில்வே மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்க உள்ளது. இதுதொடர்பாக மதுரை  ரயில்வே கோட்டம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  காசி சிறப்பு ரயில்,

“ஜனவரி 16 அன்று மதுரையிலிருந்து புறப்படுகிறது.

ஜனவரி 19 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம் செய்யப்பட உள்ளது.

ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் முடித்து மாலை ஆரத்தியில் பங்கேற்கலாம்.

ஜனவரி 21 அன்று கயாவில் முன்னோர்களுக்குப் பிண்ட பூஜை செய்து மங்கள கௌரி சக்தி பீட தரிசனம்.

ஜனவரி 23 அன்று காமாக்கியா தேவி சக்தி பீட தரிசனம்.

ஜனவரி 25 அன்று கொல்கத்தா காளி தேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேஸ்வரர் தரிசனம்.

ஜனவரி 26 அன்று ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜகந்நாதர், பிமலா தேவி சக்தி பீடம் தரிசனம்

ஜனவரி 28 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேருகிறது.

இந்த ரயிலில், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி ரயில் பெட்டிக்கான கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் பேருந்து வசதி உட்பட நபர் ஒருவருக்கு ரூ 21,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டியில் பயணம் செய்யக் கட்டணம் ரூ 27,800 வசூலிக்கப்படுகிறது.

பயணச் சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7305858585 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.