உலகிலேயே முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்கக் குட்டிகள்

உலகின் முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் தென் ஆப்ரிக்காவில் இரண்டு சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.

lion

ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்ந்து வரும் சிங்கங்கள் கடந்த 20 ஆண்டுகளாக அழிந்து வருகின்றன. இதுவரை 43 சதவிகித சிங்கங்கள் அழிந்த நிலையில் சர்வதேச அளவில் 20 ஆயிரம் சிங்கங்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக அழிந்துவரும் சிங்கங்களை காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிக்களை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவின் தலைநகரான் பிரிடோரியாவில் உள்ள விஞ்ஞானிகள் பெண் சிங்கம் ஒன்றை செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.

முன்னதாக உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் விந்தணுவை (உயிரணு) சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்பு செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பபைக்குள் வைத்தனர். கர்ப்பக் காலம் முடிந்த பின்னர் அந்த பெண் சிங்கத்திற்கு 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். 2 சிங்க குட்டிகளும் நல்ல ஆரோக்யத்துடன் உள்ளன.

ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வன விலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். இதன் மூலம் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை இவைகள் பெற்றுள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-