நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – மத்திய நேரடி வரிகள் வாரியம்

Must read

மும்பை: 
டிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி எய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சோனு சூட் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பான இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சோனு சூட், 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகருக்குச் சொந்தமான இடங்களிலும், லக்னோவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராமில் உள்ள 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article