சமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’  அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் மூடப்படும் என்று கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் நிரந்தரமாக நிறுத்தப்படும் என்றும், அதற்குள் பயனாளர் கள் தங்கது தகவல்களை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை  கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

கூகுள் பிளஸ் உபயோகப்படுத்துபவர்களின் தகவல்கள் திருட்டப்பட்டு வருவதாக சமீபகாலமாக ஏராளமான புகார்கள் எழுந்ததது. இதையடுத்து,  கூகுள் பிளஸ் வளைதளத்தை  பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்ட கூகுள் பிளஸ் எதிர்பார்த்த அளவிற்கு  பயனாளர்களை கவரவில்லை. மேலும், அதன் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருப்பதாகவும், தகவல்கள் திருடப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்தது. சுமார் 5 லட்சம் பயனர்களின் கணக்குகளின் அடிப்படை விவரங்கள்  திருடப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூகுள் நிறுவனமே தெரிவித்திருந்தது.

அதையொட்டியே,  கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தாலும் கூகுள் பிளஸ் வலைதளத்டிதை நிரந்தரமாக மூட முடிவெடுத்ததாக கூகுள் கூறியுள்ளது. இது சமூக வலைதளவாசிகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Google official announced, Social Media website GOOGLE PLUS WILL shutting down on August 2019, சமூக வலைதளமான 'கூகுள் பிளஸ்' விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-=-