cancer1
ஒரு புதிய ஆய்வின் படி பாரம்பரியமாக உபயோகிக்கப்படும் நுண்ணோக்கி இல்லாத இடங்களில் கைப்பேசியை அடிப்படையாகக் கொண்ட நுண்ணோக்கியியல் மூலம் தோல் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறியலாம்.
வளரும் நாடுகளில் தோல் புற்றுநோயைக் கண்டறிய கைப்பேசி நுண்ணோக்கி பேருதவியாக இருக்குமென ஹூஸ்டனிலுள்ள டெக்ஸஸ் சுகாதார அறிவியல் மையப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
“தொலைத்தூரப் பகுதிகளில் உள்ள மருத்துவர்களுக்குத் தோல் மாதிரிகளை வைத்து மதிப்பீடு செய்யும் திறன் கொண்ட நுண்ணோக்கி கிடைப்பதில்லை.அவர்கள் தங்களுடைய கைப்பேசி மூலம் அணுக்களின் வளர்ச்சியினை புகைப்படம் எடுத்து ஆய்வுக்கு அனுப்பலாம்” என டெக்ஸஸ் சுகாதார அறிவியல் மையப் பல்கலைக்கழகத்தின் தோல் நோய் உதவிப் பேராசிரியர் ரிச்சர்ட் ஜஹன்-டிக் கூறினார்.
cancer0
ஜஹன்-டிக் அவருடைய சக ஊழியர்களுடன் மெக்கவர்ன் மருத்துவக் கல்லூரியிலும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியிலும் மேற்கொண்ட ஆய்வின்
cancer4
முடிவில், “பாரம்பரியமாக உபயோகிக்கப்பட்ட ஒளி நுண்ணோக்கியையும் கைப்பேசி நுண்ணோக்கியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், கைப்பேசி நுண்ணோக்கி 90% கருங்கட்டியல்லாத தோல் புற்றுநோயைக் கண்டறிந்துள்ளது.” “கைப்பேசி நுண்ணோக்கி மூலம் கருங்கட்டிகளை கண்டறியும் விகிதம் 60%. கைப்பேசி நுண்ணோக்கியை எதிர்காலத்தில் தோல் நோய் மற்றும் நோயியலில் உபயோகப்படுத்த இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும்” எனவும் ஜஹன்-டிக் கூறினார்.
cancer2
கைப்பேசி நுண்ணோக்கியை உருவாக்க ஒரு மூன்று மி.மீ பந்து லென்ஸ், கைப்பேசி லென்ஸையும் பால் லென்ஸையும் இணைக்க ஒரு சிறு பிளாஸ்டிக் துண்டம் மற்றும் இவையனைத்தையும் இணைக்க ஒரு டேப் தேவைப்படும். மின்னணு கடையில் ஒரு பந்து லென்ஸினுடைய விலை 14 டாலர்கள். இதை லேசர் ஆப்டிக்ஸிலும் உபயோகிக்கலாமென ஆய்வாளர்கள் கூறினர்.
cancer3
மருத்துவரோ அல்லது தொழில்நுட்ப வல்லுநரோ கண்ணாடித் தகடின் மேல் வைக்கப்பட்டுள்ள தோல்மாதிரியின் மேலே கைப்பேசி நுண்ணோக்கியைப் பிடித்துக்கொண்டு அந்த மாதிரி சரியாகத் தெரியும் வரை காத்திருக்கின்றனர். அந்த மருத்துவர் நோயியலில் தேர்ந்தவராக இருந்தால் மாதிரியைப் பற்றி விளக்குவர் அல்லது அதைப் புகைப்படம் எடுத்து விளக்கத்திற்காக மின்னஞ்சல் அனுப்புவர்.
ஆராய்ச்சியாளர்கள் 1021 மாதிரி ஸ்லைடுகள் அதாவது அதில் 136 பேசல் செல் கார்சினோமாஸ்,94 ஸ்குவாமஸ் செல் கார்சினோமாஸ் மற்றும் 15 மெலனோமாஸ் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் கைப்பேசி நுண்ணோக்கி 95.6% பேசல் செல் கார்சினோமாக்களையும் 89% ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்களையும் கண்டுபிடித்தது.
பாரம்பரிய நுண்ணோக்கி உபயோகிக்க முடியாத இடங்களில் மிகச் சிறந்த செயல்திறன் பண்புகள் கொண்டக் கைப்பேசி நுண்ணோக்கி உபயோகிப்பதால் கருங்கட்டியல்லாத தோல் புற்றுநோயை குறைந்த செலவில்ஆராயலாம்.
தொடர்புடைய கட்டுரைகள் (தலைப்பைச் சொடுக்கவும்):

  1. புற்றுநோயைத் தடுக்க அறிவுரை
  2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…..9-13 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி
  3. ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களால் புற்றுநோய்!
  4. 40 +  பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம்: பஞ்சாப் மாநில அரசு தீவிரம்
  5. புற்றுநோய் தாக்குதலின் அறிகுறி விழிப்புணர்வு இருந்தால் உயிர் பிழைக்கலாம்
  6. எச்சரிக்கை: பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் புற்று நோய் அபாயம்