நெல் ஜெயராமனின் இறுதிசெலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாரிசாக கருதப்பட்ட நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றார். பாரம்பரிய நெல் வகைகளை உயிர்ப்பித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நெல் ஜெயராமன் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

jeya

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் தான் நெல் ஜெயராமன். யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமை நெல் ஜெயராமனையே சாரும். அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை அளித்து வந்தார்.

இயற்கை தொழில்நுட்ப முறையில் நெல் சாகுபடி செய்யவும் ஜெயராமன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். கிட்டத்தட்ட 174 பாரம்பரிய நெல் விதைகளை அழிவில் இருந்து காத்த நெல் ஜயராமன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புற்றுநோயல் அவதிப்பட்டு வந்தார்.

11

சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை 5.10 மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த நெல் ஜெயரமனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான கட்டிமேடுவில் நாளை மதியம் 12மணியளவில் நடைபெற உள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான அனைத்து செலவுகளையும், இறுதிச்சடங்கிற்கான செலவுகளையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக ஜெயராமனின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் சிவகார்த்திகேயன் பார்த்து வந்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-