சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வாரா  என்பது இன்று முடிவாகும் என்று தெரிகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
download-1
 
லண்டன் டாக்டர் மற்றும் டில்லி எய்ம்ஸ் டாக்டர்களுடன் இணைந்து அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை சிங்கப்பூர் அழைத்து சென்றால் அதிநவீன சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூர் பயணத்துக்கு முதல்வரின் உடல் நிலை இடம் கொடுக்குமா என்ற எண்ணிய அப்போலோ நிர்வாகம் சிங்கப்பூர்  மருத்துவர்களை  அழைத்துள்ளது.
அதன்படி சிங்கப்பூரில் இருந்து இரண்டு டாக்டர்கள் வந்து  இன்று முதல்வர் ஜெயலலிதாவை பரிசோதனை செய்து இங்கேயே சிகிச்சை அளிக்கமுடியுமா அல்லது சிங்கப்பூர் அழைத்து செல்லாமா என்பதை முடிவு செய்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.