சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது.

“மறக்குமா நெஞ்சம்” என்று தொடங்கும் இந்தப் பாடலை கவிஞர் தாமரை எழுதி இருக்கிறார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த புதுவரவு ஷித்தி இத்னானி நடிக்கிறார்.

செப்டம்பர் 15 ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.