தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் ஆன்மிக நிகழ்ச்சிக்கு   உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும்கலை அமைப்பு, இன்றும் நாளையும் தஞ்சை பெரிய கோயிலில் “விஞ்ஞான பைரவம்” என்ற தியான நிகழ்ச்சியை நடத்துகிறது. இதற்ககாக பெரிய கோயிலின் பிரகராரத்தில் பெரும் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள், “11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கலைப்படைப்பு தஞ்சை பெரி கோயில். இதை யுனெஸ்கோ நிறுவனமே அங்கீகரித்திருக்கிறது. இக்கோயில் தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கோயிலுக்கும் அரசு நிகழ்ச்சிகள்தான் நடைபெறும். ஆனால் முதன் முறையாக வாழும்கலை என்ற தனியார் அமைப்புக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.  மேலும் இந் நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பு ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.3000 கட்டணம் விதித்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதே நேரம் வாழும் கலை அமைப்பினர், “தஞ்சை பெரிய கோயிலில் ஏற்கெனவே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. நாங்களும் தொல்லியல் துறை அறநிலையத்துறை ஆகியவற்றிடம் உரிய அனுமதி பெற்றே நிகழ்ச்சியை நடத்துகிறோம். இந்த தியான நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் விரும்பியவர்கள் அன்பளிப்பு அளிக்கலாம். மற்றபடி கட்டாய நன்கொடை வாங்கவதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே குறிப்பிட்ட நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி சி.பி.எம். கட்சி தலைமையில் தஞ்சை பெரிய கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக சிவகங்கை பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக கோயில் வரை சென்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், “வாழும்கலை அமைப்பினர் தஞ்சை பெரியகோயிலுக்குள் தியான நிகழ்ச்சி நடத்துவதை தடை செய்ய வேண்டும்” என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை துவங்கி இரண்டு நாட்கள் நடக்க இருந்த வாழும்கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது. பந்தல்-கூடாரம் ஆகியவற்றை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ShreeSreeShankar  programme Tanjore  bigtemple  ban Chennai highcourt Madurai branch, தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
-=-