கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Must read

நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் உள்ள அம்மன் கோயிலில், கோயில் கோடை விழா நடைபெற்றது.  இந்த விழா முடிந்தது விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டுகளை விழா பாதுகாப்பு வந்த போலீசார் அகற்றினர்.

இந்த போர்டுகளை அகற்ற கூடாது என்று ஆறுமுகம் என்ற நபர், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்ளிட்ட காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த மார்க்கரேட் திரேஷாவை உடனிருந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த கத்தி குத்து முன்விரோதம் காரணமாக நடத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்திய ஆறுமுகத்தை பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article