அறிவோம் அந்தரங்கம்: 8:  பன்றியின் கொழுப்பை தடவினால் “அது” வளர்ச்சி அடையுமா?:  டாக்டர் காமராஜ் பதில்கள்

பாலியல் குறித்த உங்கள் சந்தேகங்களை – கேள்விகளை  aaasomasundaram என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் ஊர், பெயர் வெளியிடப்படாது.

என்னுடைய வயது 22. நான் பன்னிரண்டு வயது முதல் சுய இன்பம் செய்து வருகிறேன்.  இதனால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா? பிறப்புறுப்பில் எரிச்சல் இருக்கிறது. சுய இன்பத்தினால் உடலுக்குப் பின்விளைவு ஏற்படுமா?  மனைவிக்கு முழு இன்பத்தை அளிக்க முடியுமா? சுய இன்பத்தை  கைவிட தயவு செய்து வழி கூறவும்.

 சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடலுக்கு எவ்விதத் தீங்கும் இல்லை. இதை நிறுத்த  நினைத்தால் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் மேலோங்கி உங்களை தோல்வியுறச் செய்துவிடும். மீண்டும் மீண்டும் நீங்கள் சுய   இன்பம்  செய்வதை நிறுத்த முயற்சித்து தோல்வி அடைந்தால் மனத்தளர்ச்சிக்கு ஆளாகிவிடுவீர்கள்.

 என்வே, சுய இன்பம்  செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் அதை அனுபவித்துவிட்டு பின்பு அதை மறந்து மற்ற வேலையில் ஈடுபடுங்கள். சுய இன்பம் செய்தபிறகு  ஆணுறுப்பைச் சுற்றி எரிச்சல்  வருவதற்கு உங்கள்  குற்ற உணர்வோ  அல்லது  நீங்கள்  முரட்டுத்தமாக செய்வதோ காரணமாக இருக்கலாம். முரட்டுத்தனமாக சுய இன்பம் செய்வதை நிறுத்தி விட்டு கே-ஒய்  ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மிருதுவான முறையில் சுய  இன்பம் செய்யலாம். மனைவியையும் மகிழ்விக்கலாம்.

 என்வயது 25. பதினைந்து வயது முதல் சுய இன்பம் செய்து வருகிறேன். என்னுடைய  ஆணுறுப்பின் மேல்தோல் முழுவதும் ஒதுங்கியுள்ளது. சுய இன்பம்   பெறுவதால்  இப்படி நேர்கிறதா அல்லது எல்லோருக்கும் நாளடைவில் மேல்தோல் ஒதுங்கிவிடுமா? இதனால்    பாதிப்பு ஏற்படுமா? விறைப்புத்தன்மை இல்லாதபோது ஆணுறுப்பு கீழே தொங்குவதுபோல்தான் இருக்குமா? 

 சுய இன்பம் செய்யும்போது  மேல்தோல் பின்னுக்கு வரலாம், வராமலும் இருக்கலாம். இதனால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.  இது  பற்றிக் கவலைப்படாதீர்கள்.  சுய இன்பத்தின்போது தலையணையப் பயன்படுத்தலாம். பாட்டில், கண்ணாடித் துண்டு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்கள். விறைப்பு இல்லாத நேரத்தில் ஆண் குறிகிழே  தொங்குவது இயற்கைதான்.

நான் தினந்தோறும் சுய இன்பம் செய்து வருகிறேன். சுய  இன்பம் செய்வதால் வெளியேறும்  விந்தணுக்கள் குறைந்து மனைவியிடம் உடலுறவு கொள்ளும்போது குழந்தை பிறக்காது போவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?

 உடலில் தினமும் கோடிக்கணக்கான விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. நீங்கள்  சுய இன்பம் செய்தால் அவை வெளியேறுகின்றன. இல்லையெனில் நமது உடலிலேயே அழிந்து வெள்ளை அணுக்களால் அப்புறப்படுத்தப்படுகின்றன அல்லது தூக்கத்தில் விந்து வெளியேற்றப்படும். எனவெ, இதனால் மனைவியிடம் உடலுறவு கொள்வதால் எவ்வித சிக்கலும்  ஏற்பட வாய்ப்பில்லை. மகப் பேறு அடைவதிலும் பிரச்னை இருக்காது.

எனது வயது 25. நான் கடந்த பத்தாண்டுகளாக சுய இன்பம் செய்து வருகிறேன். என்னுடைய ஆணுறுப்பு மிகவும் சிறிதாக உள்ளது. எழுச்சி அடையாதபோது  இரண்டு அங்குலப் பருமனும், எழுச்சியடையும்போது  மூன்று அங்குல நீளமும், இரண்டு அங்குலப் பருமன் மட்டுமே உள்ளது.

திருமணம் செய்து கொள்ளும்படி வீட்டில் உள்ளவர்கள் என்னை வற்புறுத்துகின்றனர். பன்றியின் கொழுப்பை அதன் மீது தடவினால் வளர்ச்சி அடையும் என்று கேள்விப்பட்டேன். அவ்வாறு செய்யலாமா?

 உங்கள் ஆணுறுப்பு சரியான அளவில் தான் உள்ளது. நீங்கள் செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கும், குழந்தை பெற்றுக்  கொள்ளவும் இந்த  அளவே போதும். மனைவியை செக்ஸ் ரீதியாக நிறைவு செய்வது, மனத்தளவில் நீங்கள்  நடந்து  கொள்ளும் முறையிலும், உடலளவில் நீங்கள் மனைவியைத் தூண்டும் விதத்திலும் தான் இருக்கிறது. ஆணுறுப்பைப் பெரிதுபடுத்த பன்றியின் கொழுப்பு அல்லது மாத்திரைகளைப் பயன்படுத்தாதீர்கள். அதனால் பண இழப்பும், மன உளைச்சலும் தான் ஏற்படும்.

 

Tags: sexual-doubts-questions-and-answers-by-dr-kamaraj-8, அறிவோம் அந்தரங்கம்: 8:  பன்றியின் கொழுப்பை தடவினால் “அது” வளர்ச்சி அடையுமா?:  டாக்டர் காமராஜ் பதில்கள்