அறிவோம் அந்தரங்கம்: 7: முதலிரவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?:  டாக்டர் காமராஜ் பதில்கள்

 

பாலியல் குறித்த உங்கள் சந்தேகங்களை  – கேள்விகளை  aaasomasundaram@gmail.com  உங்கள் பெயர், ஊர் வெளியிடப்படமாட்டாது.

கன்னித்திரை கிழிந்திருந்தால் கற்பிருக்காதா?

 கன்னித்திரை கிழிந்திருந்தால் கற்பிழந்தவள் என்ற நோக்கோடு பெண்ணைப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. உடல்பயிற்சிகள், சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பம், பிறவியிலேயே குறை வளர்ச்சி போன்ற காரணங்களால் கன்னித்திரை கிழிந்துவிடும். ஆகவே, கன்னித்திரை கற்புக்கும் தொடர்பு இல்லை.

எனக்கு விரவில் திருமணம் நடக்கவிருக்கிறது. வயது 30. இதற்கு முன்பு எனக்கு பாலுறவு அனுபவம் உள்ளது. தோழியுடன் பாலுறவு வைத்திருந்தேன். அவளுக்கும் திருமணமாகிவிட்டது.

 முதலிரவில் அன்று பாலுறவு கொள்கையில் அனுபவமுள்ளவனாக இருந்தாலும்,தெரியாததுபோல் இருக்க வேண்டுமா?  இல்லை.  தெரிந்ததுபோல் பல் கோணங்களில் எல்லாம் செய்தால் மனைவிக்கு சந்தேகம் ஏற்படுமா? தனக்கு முன்பு வேறு யாரிடமாவது சென்றிருப்பாரோ, அதுதான் இப்படி விவரமாக, தெளிவாக பாலுறவு கொள்கிறாரா என்று நினைப்பார்களா?  முதலிரவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறவும்.

பாலுறவில் நீங்கள் அனுபவம் உள்ளவராக இருந்தாலும், உங்கள் மனைவிக்குப் புதிது என்பதால் நீங்கள்  பழகிய பெண்களிடம் பாலுறவு கொள்வது போன்று வைத்துக் கொள்ளக் கூடாது.முதன் முதலில் பாலுறவு கொள்ளும் பெண்ணிடம் நீங்கள்  ஆணுறுப்பை நுழைத்து பாலுறவில் ஈடுபடுவது மிகவும் கடினம். எனவே, பல்வேறு நிலையில் உறவு என்பது சாத்தியமில்லை. பொறுமையாகத் தூண்டுதல்கள் மூலமாக புதிய பெண்ணை கிளர்ச்சி அடையச் செய்வது மட்டுமே முதலிரவில் செய்யக்கூடியது.

மணமான தம்பதியினர் அனைவரும் முழுமையான செக்ஸ் இன்பத்தை அனுபவித்து மகிழ்வுடன் வாழ்கிறார்களா?

 நாங்கள் நடத்திய ஆய்வில்  பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டம்  அடைய இயலாதவர்களாகவே இருக்கின்றனர். பெரும்பாலான ஆண்கள், உடலுறவில் சில நிமிடங்களில் விந்து வெளியேறி  மன நிறைவின்றி  தொல்லையுறுகின்றனர். இருபது வயது ஆண்களில் 25 சதவீதமும், 50 வயதில் 53சதவீதம் ஆண்களும் விறைப்புத் தன்மைக் குறைவால் தொல்லையுறுகின்றனர்.

 எனவே, திருமணம் செய்து கொண்டவர்களும், செய்து கொள்ளப்போகும் இளைஞர்களும் செக்ஸ் பற்றிய உண்மைகளை அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும். உங்களுக்குச் சொல்லும் ஒரே பதில், உடலுறவு கொள்ள வேண்டும் என எண்ணியயுடன் பாலுறவில் ஈடுபட வேண்டாம். மனைவியுடன் சிறிது நேரம் கொஞ்சிப் பேசுங்கள். பின்பு முத்தமிடுங்கள். உடலின் பாகங்களைத் தொட்டுத் தடவிக் கொள்ளுங்கள். தாமாக எல்லாம் நடக்கும்.

 பின்பு பெண்ணின் மார்பகங்களைத் தூண்டுங்கள். மார்பகம் சிறிதாகவோ, அல்லது பெரிதாகவோ இருந்தாலும் அதைத் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும் கிளச்சியும்  அடைகிறார்கள். ஆண்கள் சுயநலம் மிக்கவர்களாக தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு மார்பகங்களைத் தூண்டுவதால் முப்பது சதவீதம் பெண்கள் எரிச்சலடைகிறார்கள். மனைவியின் எண்ணங்கள் அறிந்து மென்மையாகக் கையாளுங்கள்.

பெண்களை உச்சக்கட்டம் அடைய வைப்பதில் கிளிட்டோரிஸுக்குப் பெரும் பங்குள்ளது. பெண் உறுப்புகளிலேயே அதிக இன்பத்தைக் கொடுப்பது கிளிடோரிஸ் தூண்டுதல் தான். இதை விரல்கள் மூலமும் நாவினால் தூண்டுயும் பெண்ணை உச்சக்கட்டம் அடையச் செய்யலாம். பெரும்பாலான ஆண்கள் இத்சிப் பற்றிய எவ்வித அறிவும் இன்றி இருக்கிறாகள். எனவே, பெரும்பாலான மனைவியர் உறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில்லை.

 விந்து விரைவாக வெளியேறும் ஆண்கள் உறவில் ஈடுபடும் போது தாங்கள் கீழே படுத்துக் கொண்டு மனைவியை மேலே இருந்து உறவில் ஈடுபடச் செய்ய வேண்டும். விந்து வெளிவரும் என்ற உணர்வுடன் உறவை நிறுத்தவும். பின்பு ஒரு நிமிடம் கழித்து மீண்டும் உறவில் ஈடுபடலாம்.இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் விந்து விரைந்து வெளியாவதை தடுக்க இயலும். நீண்ட நேரம்  உறவு கொள்ள முடியும்.

எனக்கு வயது 30. எந்தப் பெண்ணிடமும் இதுவரை உறவு வைத்துக் கொண்டதில்லை.  எனக்கு விரைவில் திருமணம் ஆகப் போகிறது. என்னுடைய ஆண்குறியின் மேல் பக்கத் தோல் மட்டுமே பின்னோக்கிச் செல்கிறது. அது சிறுநீர்த்துவாரத்தின் விளிம்பிலேயே ஒட்டிக் கொண்டுள்ளது. தோலை மேலும் பின்னோக்கி இழுத்தால் ஆண்குறியே கீழ்நோக்கி வளைகிறது. எனக்கு என்ன குறை? என்னால் உடலுறவில் சிறப்பாகச் செயல்பட முடியுமா?

 பொதுவாக ஆணுறுப்புக்குக் கீழேயுள்ள தோல்  ஒட்டிய படிதான் இருக்கும்.  அந்த தோல் தான்  ஆணுறுப்பின் அதிக ரத்த ஓட்டமும், உணர்ச்சியும் உள்ள பகுதி. திருமணம்  ஆனவுடன் அந்தப் பகுதியை உங்கள்  மனைவியின் நாக்கினால் தூண்டச் சொல்லுங்கள். உங்களுக்கு இன்பம் அதிகரிக்கும்.

 சிலருக்கு அப்பகுதி குறைவான நீளமுள்ளதாக இருக்கும். அவ்வாறு இருந்தால் சில சிக்கல்களை சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டும்.

 

Tags: sexual-doubts-questions-and-answers-by-dr-kamaraj-7-, அறிவோம் அந்தரங்கம்: 7: முதலிரவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?:  டாக்டர் காமராஜ் பதில்கள்