அறிவோம் அந்தரங்கம்: 5: சுய இன்பம் குறித்த சந்தேகங்கள்:  டாக்டர் காமராஜ் பதில்கள்

நான் பதினைந்து வயதிலிருந்தே சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இப்போதும் தொடர்ந்து செய்து வருகிறேன். தொடக்க காலத்தில் என் ஆண்மையைப் பார்த்து நானே வியப்படைவேன். ஆனால்,க டந்த சில மாதங்களாக என் உறுப்பு மிகச் சிறிதாக, பச்சை மிளாகாய் அளவில் உள்ளது. முன்பு இருந்த ஆண்மைக்கும் இப்போது  இருக்கும் ஆண்மைக்கும்  வேறுபாடு தெரிகிறது. என் ஆணுறுப்பு ஏன் இப்படிச் சுருங்கி சிறிதாகிவிட்டது? இதைச் சரிசெய்ய என்ன வழி?

ஆணுறுப்பு  எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. சில நேரங்களில் முழுமையான விறைப்பு நிலை, மிகவும் சுருங்கிய நிலை, பாதி விறைப்படைந்த நிலை என பலவாறான நிலைகள் அது இருக்கலாம். மேலும், சுய இன்பம் செய்வதற்கும் ஆண் உறுப்பின் நிலைக்கும் தொடர்பில்லை. இதைச் சரி செய்ய  மருந்துகள் ஏதும் தேவையில்லை. உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலே போதும்.

எனக்கு வயது 24 நான் பதினைந்து வயதிலிருந்தே சுய  இன்பம் பெற்று வருகிறேன். சுய இன்பத்துக்குப் பிறகு மனம் லேசாகவும்,ரிலாக்ஸாகவும் இருக்கிறது. என்னுடைய சிக்கல் என்னவென்றால், தொடக்கத்தில் சுய இன்பத்தில் நீண்ட நேரம் ஈடுபட முடிந்தது.  உடல் வியர்த்து ஒரு மாதிரியான மாற்றங்கள் தெரியும். இப்போது அப்படித் தெரிவதில்லை. சுய இன்பம் தொடங்கியவுடன் விந்து வெளிப்பட்டு விடுகிறது. எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஏதேனும் சிக்கல் வருமா?  என்னுடைய மனைவியை  மகிழ்விக்க முடியுமா? என்னுடைய ஆண்குறியும் முன்பைவிட சிறுத்து விட்டது. இதனால் பாதிப்பு ஏற்படுமா? என் சிக்களையும், சந்தேகங்களையும் தீர்க்க வேண்டுகிறேன்.

தொடர்ந்து சுய இன்பம் அனுபவிக்கும் போது அதிலுள்ள கிளர்ச்சி,இன்பம், உற்சாகம் குறைவது இயற்கை. இதே போன்று, முதன் முறையாக மனைவியுடன்  பாலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி பத்து ஆண்டுகளுக்குப் பின் ஈடுபடும்போது ஏற்படாது. ஆணுறுப்பு சிறுத்துப் போய் விட்டது எனக் கூறியுள்ளீர்கள்.அதிகமான சுய இன்பத்தால் ஆணுறுப்பு சிறுத்துப் போவதில்லை.

ஆணுறுப்பு சிறுத்துப் போவதாகத் தோன்றுவதற்கான காரணம், சுய இன்பப் பழக்கத்தைப் பற்றிய உங்களுடைய குற்ற உணர்வுதான் குற்ற உணர்விலிருந்து விடுபட்டாலே உங்களது எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

எனக்கு வயது  24. என் சிறுவயதில் சுய இன்பத்தால் மிகத் தீவிரமாக ஈடுபட்டேன். அதனால் தானோ,என்னவோ இப்போது விந்து உடனடியாக வெளியாகிவிடுகிறது. என் உறுப்பின்  முன் பாகம் பெருத்தும்,பின்பாகம் சிறுத்தும் உள்ளது.இதனால் திருமண பயம் ஏற்பட்டுள்ளது. என் எதிர்கால வாழ்வை எண்ணி, சுய இன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும், மருந்துகளின் பெயர்களையும் தெரிவிப்பீர்களா?

சுய இன்பம் செய்யும்போது, வேகமாக உச்சத்தை அடைய வேண்டும் என நீங்கள் எண்ணுவ தால்தான் உங்களுக்கு விரைவாக விந்து வெளியேறுகிறது.

அமைதியாக மிக மெதுவாகச் செய்தீர்களேயானால் விந்து வெளியேர நேரமாகும். உங்கள் ஆணுறுப்பின் முன்புறம் பெருத்தும், பின்புறம் சிறுத்தும் உள்ளது நோயல்ல. சரியான நிலைதான். திருமணத்துக்குப் பின் எவ்வித சிக்கலும் வராது. இல்லாத சிக்கலைத் தீர்பதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடத் தொடங்கினால் அதனால் சிக்கல்கள் வரலாம்.

நான் தினமும் ஒரு முறையாவது சுய இன்பம் செய்வேன். எனக்கு 18 வயதுதான். தொலைக்காட்சி யில் செக்ஸ் படம் பார்க்கும்போது சுய இன்பம் பெற வேண்டும் என்ற ஆசை வருகிறது.என் வயதுக்கு மேல் உள்ளவர்கள் மூதுகூட ஆசைப்படுவதுண்டு. நானும் இதை நிறுத்திவிட வேண்டும் என்று எவ்வளவோ நினைக்கின்றேன்.ஆனால் முடியவில்ல. இதனால் என் திருமணத்துக்குப் பிறகு ஆபத்து வருமோ என்று பயமாக இருக்கிறது.

எல்லா இளைஞர்களுக்கும் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகள்தான்  உங்களுக்கும் ஏறட்டி ருக்கிறது. சுய இன்பம் எத்தனை முறை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம், தவறில்லை. அனுபவித்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். குற்ற உணர்வு மேலிட்டு படிப்பிலிருந்து கவனத்தை சிதறவிட வேண்டாம்.

வயதில் அதிகமான பெண்களைப் பார்க்கும்போது செக்ஸ் உணர்வுகள்  வருவது ஒன்றும் குற்றமல்ல. திருமணம் வரை விலைமாதர் போன்ற பெண்களை நாடாமல் சுய இன்பத்துடன் நிறுத்துங்கள். வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க வேண்டிய வயது இது.  செக்ஸ் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஆனால், பிற பெண்களிடம் பரீட்சை செய்து பார்க்க வேண்டாம். விடலைப் பருவத்திலேயே முளைவிட்டு விடும் செக்ஸ் தேவைகளுக்கு சுய இன்பம்தான் நல்ல வடிகால்.

 சுய இன்பம் செய்பவர்களுக்கு சீக்கிரம் விந்து வெளியாகும் என்று ஆணுறுப்பின் முனைப்பகுதி யிலுள்ள நரம்புகள் தளர்ச்சியடையும் என்றும்  ஓர் இதழில் படித்தேன். இது உண்மையா? அதிகாலையில் விறைத்த நிலையிலுள்ள ஆணுறுப்பு திருமணத்துக்குப் பிறகு அப்படியிருக்காது என்கிறார்கள். அறுபது வயதிலும் காலை நேர உணர்ச்சி இருக்குமா?

சுய இன்பம் மெதுவாக அனுபவித்தச் செய்பவர்களுக்கு இவ்வாறு விரைந்து விந்து வெளிப்படுவதில்லை. சிலர் எப்போதும் ஒருவித குற்ற உணர்வினால் விரைந்து சுய இன்பம் செய்து முடிக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு சீக்கிரம் விந்து வெளிப்படும் பிரச்னை ஏற்படலாம். நரம்புத் தளர்ச்சி அடைவது பற்றிய கதை உண்மையல்ல. அதிகாலையில் வயதான பிறகும் விறைப்பு ஏற்படும். ஆனால்,அது இருபது முப்பது வயதில் ஏற்படுவது போன்று நீண்ட நேரம்  நல்ல விறைப்புத் தன்மை உடையதாக இருக்காது.

Tags: sexual doubts questions and answers by dr kamaraj-5- Doubts about Masturbation, அறிவோம் அந்தரங்கம்: 5: சுய இன்பம் குறித்த சந்தேகங்கள்:  டாக்டர் காமராஜ் பதில்கள்