மார்பகங்கள் பெரிதாக என்ன செய்ய வேண்டும்? : அறிவோம் அந்தரங்கம்!:   டாக்டர் காமராஜ் பதில்கள் 4

வயது 26. சிறு வயது முதல் எனது வலது பக்க விரைப்பை பெரிதாக உள்ளது.  சற்று கடினமாக வேலை செய்தாலோ அல்லது நெடுந்தொலைவு நடந்து சென்றாலோ விரைப்பையில் வலிக்கிறது.  மேலும் விரைப்பை பெரிதாகும் போது  அதிலுள்ள நரம்புகள்  மறத்துப்போகின் றன. மருந்து மாத்திரைகள்  சாப்பிட்டால் இப்பிரச்னை சரியாகுமா? அல்லது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா?

விரைப்பை பெரிதாக இருப்பதை ‘ஹைட்ரோஸீல்’ என்கிறோம். இது  யானைக்கால் நோயின் தொடக்கக் கட்டமாக இருக்கக்கூடும் அல்லது டி.பி.நோயினாலும் இப்பிரச்னை ஏற்படலாம். அரிதாக, விரைப்பையில் உருவாகும் சில கட்டிகளாலும் ஏற்படக்கூடும். முதலில் விரைப்பை பெரிதாக இருக்கிறதா என்பதை மருத்துவ ஆய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும். பையின் அளவு 15 முதல்  25 மில்லிமீட்டர் இருக்க வேண்டும்.  அதுதான் இயல்பான அளவு. இயல்பு அளவைவிட  பெரிதாக இருந்தால் எதனால் அப்படி ஏற்பட்டது என்பதற்கான  காரணத்தைக் கண்டறிய வேண்டும். ஆப்போதுதான் அதை மருந்தின் மூலம் குணப்படுத்தலாமா?  அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என முடிவு செய்ய முடியும்.

 எனது மார்பகங்கள்  இரண்டும் பெண்களுக்கு  இருப்பது போல்  பெரிதாக உள்ளன. குறிப்பாக காம்புகள் இரண்டும் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன. எதனால் இப்படி இருக்கிறது? சிறிதாக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டா?

மார்பகங்கள் பெரிதாக இருப்பதை எளிதில் சரிசெய்ய முடியும். முதலில் ஹார்மோன் சிகிச்சை மூலம் முயன்று பார்க்கலாம். முடியவில்லை எனில், அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.

எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகின்றன. எனது மனைவிக்கு மார்பகங்கள் மிகவும் சிறிதாகவே இருக்கின்றன. அவற்றைப் பெரிதாக்க முடியுமா? இதனால்  என்னால் உடலுற வில் முழு இன்பத்தை அடைய இயலவில்லை. என் மனைவியும் இது பற்றி மிகவும் கவலைப்படுகிறாள்.

சிறிதாக இருக்கும் பெண்ணின் மார்பகங்கள் அதிகக் கிளர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை

என்றும், உணர்ச்சியைத் துண்டக்கூடியவை என்றும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. மற்ற விலங்குகள் எவ்வாறு பால் கொடுக்கும் மார்புகள் பற்றி கவலைப்படுவதில்லையோ  அதுபோல் பண்டைய  கால மனிதனும்  இதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. இன்றும்கூட  மார்பகங்களை ஒரு செக்ஸ் உறுப்பாகப் பழங்குடியினர் கருதுவதில்லை. உங்கள் மனைவி கர்ப்பமடையும் போது மார்பளவு பெரிதாக மாறும்.

இதனாலேயே பல விளம்பர மாடல்கள் கர்ப்பமாகி மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை  பெண்களின் பெரிய அளவு மார்பகங்கள் தான் கவர்ச்சியாக நினைக்கிறார்கள். மேலும், இன்றைய பத்திரிகைகள், இணையம், தொலைகாட்சி மூலமாக இக்கருத்து மக்களிடையே மிகவும் ஆழமாகப் பாதிந்துவிட்டது.

மூன்று முறைகளில் மார்பகங்களைப் பெரிதாக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் படும்’ ‘எர்டிக்ட்’ என்னும் மாத்திரையைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயன்படுத்தினால் மார்பகங்கள் பெரிதாகும்.

மார்பகங்களின் அடியில் உள்ள தசைகளைத் தூண்டி வலுப்படுத்தும் பயிற்சிகள் உள்ளன. சில கருவிகள் மூலமும் இதைச் செய்ய முடியும்.

அறுவைச் சிகிச்சை செய்து சிலிக்கான் பையை உள்ளே நுழைப்பது.

முதல் இரண்டு முறைகளையும் சேர்த்துச் செய்தால் நல்ல  பலன்களை எதிர்பார்கலாம்.

சிறு மார்பாக இருந்தால் நரம்புகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள்  அதிகம் கிளர்ச்சி அடைவீர்கள். பெரிய மார்பாக இருந்தால் நரம்புகள் அடர்த்தி குறைவாக இருக்கும்.

சுய இன்பம் எப்போது மனிதனுக்குப் பழக்கமாகிறது? எத்தனை வயதுவரை இப்பழக்கத்தில் ஈடுபடலாம்.

மனிதன் சிறு குழந்தையாக இருக்கும்போதே  தனது உறுப்புகளைத் தொட்டு இன்பம் கான்கிறான். பருவம் அடைந்த உடனேயே  நண்பர்கள்  மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து பன்னிரண்டு வயதில் இருந்து எப்போது  வேண்டுமானாலும் முழுமையாக சுய இன்பத்தைக் கற்றுக் கொள்கிறான். இதில்  ஈடுபடுவதற்கு வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும் ஈடுபடலாம். வயதானோர்  மற்றும் மனைவியை  இழந்தவர்களுக்கு சுய  இன்பம் ஒரு நல்ல வடிகாலாகும். எனவே, இவர்கள் வாழ்நாள் முழுவதும் சுய இன்பத்தில் ஈடுபடலாம்.

Tags: by-dr-kamaraj-4, questions and answers, sexual doubts, மார்பகங்கள் பெரிதாக என்ன செய்ய வேண்டும்? : அறிவோம் அந்தரங்கம்!:   டாக்டர் காமராஜ் பதில்கள் 4