“அந்த” நேரத்தில் தலையணையை எப்படிப் பயன்படுத்துவது?:

அறிவோம் அந்தரங்கம்: 11: பதில்கள்: டாக்டர் காமராஜ்

பாலியல் குறித்த தங்கள் சந்தேகங்கள் – கேள்விகளை வாசகர்கள் aaasomasundaram@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அவர்களது பெயர், ஊர் வெளியிடப்பட மாட்டாது.

ஆண்களுக்கு விந்து வெளியேறுகிறபோது உச்சக்கட்டம் ஏற்படுகிறது எனக் கூறுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு எப்போது உச்சக்கட்டம் ஏற்படுகிறது? பாலுறவுக்கு நான் தயாராகும்போதும், எனது கணவரை  நான் ஆசையாகப் பார்க்கும்போதும், அவர் முன்விளையாட்டு விளையாடும் போது எனது பெண்ணுறுப்பிலிருந்து திரவக்கசிவு ஏற்படுகிறது. அதுதான் பெண்களுக்கு உச்சக்கட்டமா?

பெரும்பாலான பெண்களுக்கு உச்சக்கட்டத்தின்போது மதனநீர் எதுவும் வெளிப்படுவதில்லை.  உச்சக்கட்டம்   அடையும்போது  மார்பு படபடப்பு, மூச்சு  வாங்குதல், கை கால்கள் தளர்வு, பெண்ணுறுப்பு சுருங்கிச் சுருங்கி விரிதல்  போன்றவற்றை உணரமுடியும்.

ஒரு சதவீதம் பெண்களுக்கு மிகையாக மதனநீர் சுரக்கலாம். சில நேரங்களில் அது பார்ப்பதற்கு சிறுநீர்போல் இருக்கலாம். பாலுறவின்போது  வெளிப்படும் மதனநீர் வலியேற்படாமல் இருக்க உதவும் உயவுப் பொருளாகப் பயன்படுகிறது.

……

தலையணையை உடலுறவுக்கு எந்தெந்த  கோணத்தில் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? திருமண மற்றும் பாலியல் ஆலோசனையை எங்கு பெறலாம்?

 தலையணையை எல்லா பக்கமும் வைத்து பாலுறவில் ஈடுபட்டுப்பாருங்கள். காம சூத்திராவில் நூற்றுக்கணக்கான செக்ஸ் நிலைகள் கூறப்பட்டுள்ளன. நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட முறையில் செக்ஸில் ஈடுபட வேண்டுமென நினைக்கிறீகள். திருமணம் மற்றும் பாலியல் சார்ந்த துறையில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற பாலியல் மருத்துவரை அணுகலாம்.

….

தாம்பத்ய உறவுக்கு மனைவியின் சிக்னல் கிடைப்பதற்குள் முன் விளையாட்டின்போதே விந்துக் கசிவு ஏற்பட்டு விறைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. விந்துக்கசிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 

 விந்து முந்துதல் என்பது சில நொடிகள் முதல் சில நிமிடங்களுக்குள்  தம்பதிகள் மன நிறைவு அடைவதற்குள் விந்து வெளியேறுவதைக்  குறிக்கும்.

 நமது உடலில் சிம்பதெடிக் நரம்பு மண்டலம், பாரா சிம்பதெடிக் நரம்பு மண்டலம் என இரண்டு உண்டு, சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது ஆபத்துக் காலத்தில் ஓடுவதற்கும், விரைந்து செயல்படவும் உதவும். இந்த நரம்பு  மண்டலம்தான் விந்து வெளியேறுவதற்குக் காரணமாகும்.

 நீங்கள் பரபரப்பான மனநிலையிலோ, உடலுறவில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்துடனோ ஈடுபட்டால் விந்து விரவில் வெளியேறிவிடும். அதுபோலவே, உடற்பயிற்சிக்குப் பின்  உறவில் ஈடுபட்டாலும் விரவில் விந்து வெளியேறிவிடும்.  எனவே அமைதியான மனநிலையில், உடற்பயிற்சி செய்தவுடனே இல்லாமல் சிறிது நேரம் கழித்து உறவில் ஈடுபடுங்கள்.

 மனைவியை ஆணுறுப்பைத் தூண்டச் செய்யுங்கள். விறைப்படைந்தவுடன் தூண்டுவதை நிறுத்தச் செய்யுங்கள். மீண்டும் தூண்டச் செய்யுங்கள். பின்பு  விறைப்படைந்தவுடன் தூண்டுவதை நிறுத்தச் சொல்லுங்கள். மேலும், சில நல்ல  மருந்துகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி முழுமையாக விந்து முந்துவதைத் தவிர்த்துவிடலாம்.

….

’மார்பகக் காம்பின் நுனியில் உணர்ச்சிகளைத் தூண்டும் நரம்புகள் வலைபோல் பின்னிக் கிடக்கின்றன. திருமண வாழ்வில், ஒரு பெண் பாலுறவைவிட மார்பகத் தூண்டல்களால் அதிகம் கிளர்ச்சி அடைகிறாள். மன்மத பீடத்தில் உள்ளதைப்

போலவே   முலைக்காம்புகளும் உணர்வுத் தூண்டலுக்கு உள்ளாகும்போது பருத்துப் புடைத்து விறைப்பு அடைகின்றன. எனவே, இவற்றையும் செக்ஸ் உறுப்பாகவே கருதவேண்டும்’-  இப்படிச் சொல்லப்படுவது உண்மையா?

 நீங்கள்   கூறுவது சரிதான். மனித உடலில் ஐம்புலன்களும் செக்ஸ் உறுப்புகள்தாம். நீங்கள்  ஒரு புத்தகத்தைப் படிக்கும் போதே,  செக்ஸ்  படம் பார்க்கும்போதோ, நன்றாகத் தூண்டப்படலாம். சில ஆண்கள், நீலப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உச்சக்கட்டம் அடைந்து விந்தை வெளியேற்றிவிடுகிறார்கள்.

 ஆனால், பெண்கள்  உச்சக்கட்டம் அடைவது பற்றிய ஆய்வுகளில் கிடைத்த சில முடிவுகள்;

 ஒரு சதவீதத்தினருக்கும் குறைவான பெண்கள்  குழந்தைக்குப் பால் தரும்போதே உச்சக்கட்டம் அடைகிறார்கள். பத்து சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் உடலுறவின்போது  உச்சக்கட்டம் அடைவதற்கு கிளிட்டோரிஸ் தூண்டல் தேவைப்படுகிறது. பெரும்பாலான  கணவர்களும் இதைப் பற்றி அறியாதிருக்கிறார்கள். மனைவிக்கும் போதுமான  அளவு இது பற்றி தெரியாது. இதனால், எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டம்   அடைவதில்லை. எனவேதான், கிளிட்டோரிஸ் தூண்டல் பற்றி திரும்பத் திரும்ப கூறுகிறோம்.

Tags: "அந்த" நேரத்தில் தலையணையை எப்படிப் பயன்படுத்துவது?:, sexual-doubts-questions-and-answers-by-dr-kamaraj-11