கேரளாவில் தொடரும் கத்தோலிக்க பாதிரியார்களின் பாலியல் சேட்டை: பேராயர் மீதுகன்னியாஸ்திரி புகார்

கோட்டயம்:

கேரளாவில் கத்தோலிக்க பாதிரியார்களின் மீதான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது கன்னி யாஸ்திரி ஒருவர் பேராயர் தன்னை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, 5 கத்தோலி பாதிரியார்கள் மீது பரபரப்பு புகார் கூறப்பட்டது. அதையடுத்து அவர்களை பணியில் இருந்து கத்தோலிக்க திருச்சபை விடுவித்து சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தது. ஆனால்,  இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குள்ளான பாதிரியார்கைளை விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. 5 பாதிரியார்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், கன்னியாஸ்திரி ஒருவர் கத்தோலிக்க பேராயர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார். கேரளா வில் ரோமன் கத்தோலிக் ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக உள்ளவர் பிராங்கோ முலக்கல். இவருக்கு வயது 54. இவரது கட்டுப்பாட்டில் உள்ள மறை மாவட்டத்துக்கு  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குரவிலாங்காட்டில் பள்ளி ஒன்று உள்ளது. இதை பள்ளியை  மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், பேராயர் பிராங்கோ முலக்கல் தன்னை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாஸ்திரி  அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 2014ம் ஆண்டு  பேராயர் பிராங்கோ முலக்கல் என்னை, கோட்டயம் மாவட்டம் குரவில்லங்காடு பகுதியிலுள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து முதன் முறையாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை  13 முறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்

பேராயரின் இந்த மோசமான செயல்பாடு குறித்து ஏற்கனவே கத்தோலிக்க  கார்டினலிடம்  புகார் அளித்ததாகவும், ஆனால்,  அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

கன்னியாஸ்திரி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக, பேராயர் மூலக்கல், கன்னியாஸ்திரி பொய் புகார் கூறி உள்ளதாக  போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்  கேரளாவில், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற 2 குழந்தைகளின் தாயாரை பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்த புகார், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரியே புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sexual complaint of Catholic Priests in Kerala: The nun Complaint against Archbishop, கேரளாவில் தொடரும் கத்தோலிக்க பாதிரியார்களின் பாலியல் சேட்டை: பேராயர் மீதுகன்னியாஸ்திரி புகார்
-=-