PV Sindhu of India celebrates after won the women's single semi final match against Sayaka Takahashi of Japan during the Thomas and Uber cup final 2014, at Siri fort sports complex, in New Delhi on 23rd 2014. Express photo by Ravi Kanojia.சீனாவில் உள்ள மக்காவ் நகரில் இன்று, மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி துவங்க உள்ளது.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் சாம்பியன், ஹாங்காங் ஓபன் டென்னிஸ் இறுதிச்சுற்று என அசத்திய பி.வி.சிந்து இப்போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, 4-ஆவது முறையாக பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய முதல் சுற்றில் சீனாவின் யூ ஹன்னுடன் சிந்து மோத உள்ளார். சாய்னா நெவால், முதல் சுற்றில் இந்தோனேசியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதவுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், சமீர் வர்மா முதல் சுற்றில் செக்.குடியரசின் மிலன் லூதிக்கை எதிர்கொள்கிறார். காஷ்யப் முதல் சுற்றில் மலேசியாவின் ஜெங் சிம்மை எதிர்கொள்கின்றார். எச்.எஸ்.பிரணாய் முதல் சுற்றில் சீன தைபேவின் வெய் சென் உடன் மோத உள்ளார். தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சாய் பிரணீத் முதல் சுற்றில் லாம் ஹூ ஹிம்மை எதிர்கொள்கின்றார்.