சென்னை: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர வழியை திறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள் என, விமான பயனத்தின்போது திமுக எம்.பி. தயாநிதி மாறன், வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

பாஜக உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா அண்மையில் தனது விமான பயணத்தின் போது, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அவசர கால கதவை (Emergency Exit Door) திறந்தது சர்ச்சையானது. இதனால், விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாகவும், இது தொடர்பாக சூர்யா பயணிகள் உள்பட விமான நிறுவனத்திடமும் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில்,  சென்னை மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்‘ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் விமானத்தின் அவசர கதவு அருகே அமர்ந்திருக்கும் நிலையில், அதை சட்டிக்காட்டி,  நான் கோவைக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொள்கிறேன். எனக்கு அவசர கால கதவு அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கதவை நான் திறக்க மாட்டேன். இதனால், அனைவரது பயண நேரமும் வீணாகும், சுய அறிவுள்ள யாரும் இதுபோன்ற செயலை செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.