காலையில் தூங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பாருங்கள்….!

றங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்களும் ஆன்மீக பெரியோர்களும் கூறி உள்ளார்கள். ஏன் தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும்… இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் சந்தோஷமாக இருக்கும் என்பது இறை நம்பிக்கை.

நமது உள்ளங்களை உடலின் மற்றப்பாகங்களை விட தனித்துவமாக காட்சி அளிக்கும். பொதுவாக வெளுப்பாகவே காணப்படும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்.

நமது உள்ளங்கையில் உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள் என்று ஆன்மிகம் கூறுகிறது. கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலை மகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் ஹஸ்தரேகா சாஸ்திரம் கூறுகிறது. இதன் காரணமாகத் தான் காலையிங்ல் எழுந்ததும் தெய்வ அருளைப்பெறும் வகையில், உள்ளங்கையை பார்த்து தியானித்து எழ வேண்டும் என்று சொல்கிறது….  அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும்.

மனிதன் மட்டுமின்றி உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனிதர்களுக்கு இரவு நேரம் என்பது தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போ தைய  விஞ்ஞான வளர்ச்சியில் இரவு தூக்கமானது தடை பட்டு,  தூக்கத்தின் நேரம் மாறுபட் வருகிறது…. இதன் காரணமாகவே இன்றைய தலைமுறை  பல்வேறு புதுப்புதுநோயக்ளுக்கு ஆளாகி வருகிறது.

அதுபோல  இரவில்  சீக்கிரமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்களும் உண்டு. அதே வேளையில் இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு.

எப்படியிருந்தாலும்,  தூங்கி எழுந்ததும், உள்ளங்கையை பார்ப்பது நலம் பயக்கும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை காணலாம்.

மனிதர்கள் கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொருவரின்  செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறைவனை வணங்குவது மட்டுமின்றி அனைத்து தேவைகளுக்கும் கைகள் அவசியம்.

காலையில் எழுந்ததும், நமது கையை பார்க்கும் போது…

“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ப்ரபாதே கரதர்சனம்”

என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.

அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் இந்த ஸ்லோ கத்தை செல்வது சாலச்சிறந்தது கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் நமது உள்ளங்ககையை பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

இந்து தெய்வங்களை பார்த்தோமானால் பல தெய்வங்கள் கைகள் வணங்கிய படியும், பெரும் பாலான தெய்வங்கள் தங்களது உள்ளங்ககைகள் மூலம் ஆசி வழங்குவது போன்றும் காட்சி அளிப்பதை காணலாம்.

இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்…). ஒருவரின்  திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்… கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள்.  இப்படிப்பட்ட நமது கைகளை காலையில் எழுந்ததும் பார்த்துவிட்டு எழுந்தால் அன்றைய பொழுது உங்களுக்கு குதூகலம்தான்…

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: See the palm after sleeping in the morning .... what is the Benefit?, காலையில் தூங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பாருங்கள்....! எதற்காக?
-=-