சென்னை

சிகலாவின் சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.     வருமானவரித்துறையின் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலாவின் அறையில் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது அவருடைய அறையில் இருந்த மடிக்கணினி மற்றும் பென் டிரைவ் கைப்பாற்றப்பட்டுள்ளது.

அந்த பென் டிரவ் மூலம் ரூ. 4500 கோடிக்கு சசிகலாவுக்கு பினாமி சொத்துக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.   இது குறித்து இன்னும் 3 மாதத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.    அத்துடன் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் நடந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சசிகலா நோட்டிசுக்கு சரியான விளக்கம் அளிக்காவிட்டால் அவரது சொத்துக்கள் பினாமி சட்டத்தின் படி கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சசிகலா முறைகேடாக சொத்து சேர்த்தது நிரூபிக்க்கப் பட்டால் அவருக்கு 7 ஆண்டுவரை சிறைத்தண்டனை கிடைக்கும் என வருமானவரித்துறை எச்சரிக்கை அளித்துள்ளது.