சென்னை :
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு யூகச் செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், மதுசூதனன், வளர்மதி, கோகுல இந்திரா, சைதை துரைசாமி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் சசிகலாவை இன்று சந்தித்தனர்.

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக பொதுச்செயலாளரை ஏற்க வேண்டும் என சசிகலாவிடம் மூத்த நிர்வாகிகள் அனைவகும் வலியுறுத்தினர்.
சைதை துரைசாமி
இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சைதை.துரைசாமி, “ஜெயலலிதாவுக்கு கு செவிலித்தாயாகவும், பாதுகாவலராகவும் விளங்கியவர் சசிகலா அம்மையார். கட்சியை வழி நடத்தும் தகுதி அவருக்குத்தான்  இருக்கிறது”  என்றார்.
 
செங்கோட்டையன்
மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், “அதிமுகவை வழிநடத்தும் தகுதி சின்னம்மாவிற்கு மட்டுமே உள்ளது . எம்ஜிஆருக்குப் பின்னர், ஜெயலலிதா எப்படி கட்சியை வழி நடத்தினாரோ அதே போல அம்மாவிற்குப் பிறகு சின்னம்மாதான் முழு முதல் தகுதியானவர்.
 
இதையெல்லாம் சசிகலாவிடம் சொல்லி, நீங்கள்தான் கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும். ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின்  விருப்பம்” என்று தெரிவித்தோம்” என்றார் செங்கோட்டையன்.
 
உடுமலை ராதாகிருஷ்ணன்
 
“ஜெயலலிதா உடனேயே முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் சசிகலா.  ஜெயலலிதாவின் நிர்வாகத்திறனை உடனிருந்து  கவனித்தவர் சசிகலா. கட்சியை வழிநடத்தே அவருக்கே முழு தகுதி உண்டு.
மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “தற்போதையஉடனடி தேவை, அனைவரையும் ஒன்றிணைத்து வழிநடத்தியக்கூடிய, அனைவரும் ஏற்கக்கூடிய தலைவர்தேவை. அது சசிகலாதான். இன்று கட்சியே அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறது.
எதிரிகள்,  எப்படி கழகத்தை ஒழிக்கலாம் என நினைக்கிறார்கள். ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் நச்சு விதையை விதைக்க முயல்கிறார்கள்.
இதையெல்லாம் முறியடித்து விரையில் சசிகலா பொதுச் செயலாளர் ஆவார்” என்றார்.
தம்பிதுரை
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும், “சசிகலாவே பொதுச்செயலாளராகவேண்டும்” என்று டில்லியில் இருந்து பேட்டி அளித்துள்ளார்.
இதரர்..
முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர், கட்டுக்கோப்பான அதிமுக கட்சியை வழி நடத்தும் முழு தகுதியும் சின்னம்மாவிற்கே உண்டு என்றார். ராணுவக்கட்டுப்பாட்டுடன் கூடிய கட்சிக்கு சின்னம்மதான் தகுதியானவர் என்றனர்.