கங்கை அமரன் வீட்டை மிரட்டி பிடுங்கினர் சசிகலா குடும்பத்தினர்!: அறப்போர் இயக்கத்தின் அடுத்த வீடியோ

Must read

சசிகலா – இளவரசி

சென்னை: தனது பண்ணை வீட்டை, சசிகலா குடும்பத்தினர் மிரட்டிப் பிடுங்கிக் கொண்டனர் என இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கோர்ட்டில் குற்றம் சாட்டினார். இது குறித்த விரிவான தகவல்களுடன், “பினாமி குயின்” என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது அறப்போர் இயக்கம்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலான கங்கை அமரனின் பண்ணை வீட்டை, சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மிரட்டி வாங்கியதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
கங்கை அமரன்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சசிகலா மீதான குற்றப்பத்திரிகையிலும் கங்கை அமரனிடமிருந்து அபகரித்ததாகச் சொல்லப்படும் இந்த சொத்துகள் இடம்பெற்றுள்ளன. இப்போது ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மீண்டும் இந்த பிரச்சினை கிளம்பியுள்ளது.
அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சசிகலா குடும்பத்தினரின் மிரட்டல் நடவடிக்கைகள் குறித்து வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறது. கங்கை அமரனுக்குச் சொந்தமான பண்ணை வீட்டை எப்படி மிரட்டி வாங்கினார்கள் என்பது குறித்த வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் 2012ம் ஆண்டு, சசிகலா குடும்பத்தினர் தன்னை மிரட்டி சொத்துக்களை வாங்கினர் என்று கங்கை அமரன், கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தததை இந்த வீடியோ விவரிக்கிறது.
அப்போது சசிகலா, “கங்கை அமரனை போலீசார் மிரட்டி இப்படிச் சொல்ல வைக்கிறார்கள்” என்று கோர்ட்டில் சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
அறப்போர் இயக்கத்தின் வீடியோ:

Also read

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article