‘சர்கார்’ விஜய்யின் புதிய போஸ்டர்

விஜய் நடிக்கும் சர்கார்  படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சல்  படத்தைத் தொடர்ந்து  சர்கார்  படத்தில் நடித்து விஜய் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் இறங்குகிறார்.  படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றனர். மேலும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதில்  போஸ்டரில் நீலநிற கோட் உடன் விஜய் ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்.  இதனை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து செய்து வருகின்றனர். அத்துடன் #SarkarKondattam என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்ரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும்  சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க மிகவும் ஆவலாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.  முன்னதாக  சர்கார்   படத்தில் இடம்பெற்றுள்ள  சிம்டாங்காரன்  பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sarkar' Vijay's new poster released, ‘சர்கார்’ விஜய்யின் புதிய போஸ்டர்
-=-