சர்க்கார் சர்ச்சை: தியேட்டர்களில் வருவாய்த்துறை ரெய்டு

சென்னை:

ர்க்கார் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் மற்றும் மாநில அரசை விமர்சித்துள்ள தால் கொதிப்படைந்த அதிமுகவினர் தியேட்டர்களை தாக்கினர். தமிழக அரசும் கடுமையாக எச்சரித்தது.

இதைடுத்து பல தியேட்டர்களில் நேற்று சர்க்கார் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பு நிர்வாகம் பணிந்தது.

இந்த நிலையில் சர்க்கார் படம் பல தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் பல தியேட்டர்களில்  வருவாய்த்துறை வணிகவரித்துறையில் காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திருவாரூர் அருகே  சர்கார் படத்திற்கு அனுமதி யின்றி பேனர்கள் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sarkar controversy: Revenue department raid in theaters for high ticket fare, சர்க்கார் சர்ச்சை: தியேட்டர்களில் வருவாய்த்துறை ரெய்டு
-=-