சரவணா ஸ்டோர்ஸ் அதிபர், சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன். இதைத்தொடர்ந்து ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். மேலும், யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார். ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு, சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந் நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர் கெட்டப்பில் கெத்தாக சரவணன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர். இப்பாடலை, பா.விஜய் எழுதி இருக்கிறார்.