டெல்லி: சாரதா சிட்பண்ட் பண மோசடி தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி, நீட் தேர்வு வழக்கில் தமிழ்நாட்டுக்கு எதிராக வாதாடிய நளினி சிதம்பரத்தின் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பிரபல நிதி நிறுவனமான சாரதா சிட்பண்ட் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பணத்தை முதலீடு செய்த பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை  சின்னாப்பின்னமாக்கியது. இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களில் பலர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம்பெற்றதுடன், அவரது கட்சி ஆதரவாளர்களே உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தின் ஆலோசகராக  ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் இருந்து வந்தார். இவரது ஆலோசனையின் பேரில் செயல்பட்டுதான் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாடுடு உள்ளது.  இதனால் அவர்மீதும் குற்ற வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பல்லாயிரம் கோடி மோசடி வழக்கை, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது. இந்தவ ழக்கு தொடர்பாக,  அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது ஏற்கனவே செய்யப்பட்டதுடன்,  விசாரணைகளி நடைபெற்று வருகிறது.

விசாரணையில், . 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தின.  இதில் பண மோசடி நடைபெற்றது தெரிய வந்ததுள்ளது. இந்த  பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது.

இதைடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்காவும், தமிழ்நாட்டிற்காகவும் குரல் கொடுப்பதாக மக்களை ஏமாற்றி வரும் அரசியல் தலைவர்களின் ப.சிதம்பரமும் ஒருவர். பணத்துக்காக தனது கட்சி தலைமைக்கு எதிரான வாதாடியவர் மட்டுமல்லாம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, இந்திய அரசின் கரன்சி பிரிண்ட் செய்யும் பழைய இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றவர். அதுபோல அவரது மனைவி, நீட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், வாதாடி வரலாற்று பிழையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.