ஆசியப் போட்டி: 50 மீ துப்பாக்கி சுடுதலில் வெளிப்பதக்கம் வென்ற சஞ்சீவ் ராஜ்புட்

ஆசிய போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவில் பங்கேற்ற ராஜ்புட் 452.7 புள்ளிகளில் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

sanjeev

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 542 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவிற்கான 50 மீ துப்பாக்கி சுடுதல் 3 பொசிஷன் சுற்றில் இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ் ராஜ்புட் பங்கேற்றார்.

37வயதான ராஜ்புட் அவர்களுடன் மோதிய போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி 452.7 புள்ளிகளில் 2ம் இடம் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்கப்பட்டது. இதேப்போல் 10 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் சௌரப் சவுத்ரி 240.7 புள்ளிகளில் தங்கமும், அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகளில் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதலில் மூத்த இந்திய வீரரான அபினவ் பிந்த்ரா, சௌரப் சவுத்ரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றி அவரது ஒலிம்பிக்ஸ் கனவை நிறைவேற்றும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் துப்பாக்கி சுடுதலின் கலப்பு இரட்டையர் பிரிவில் லக்‌ஷை மற்றும் ஷ்ரேயாசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-