7 மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் டென்னிஸ் விளையாடும் சானியா மிர்சா

விரைவில் தாயாக உள்ளதாக இந்தியா நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 7 மாதம் கர்ப்பமாக உள்ள சானியா டென்னிஸ் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டென்னிஸ் விளையாடுவதில் இருந்து தன்னால் ஒதுங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

sania

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த சானியா மிர்சா 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக சானியா விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தான் விரைவில் தாயாக உள்ளதாக சானியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இன்ஸ்டகிராமில் டென்னிஸ் விளையாடும் வீடியோவைவும் பதிவிட்டுள்ளார். அதில் “ சொன்னேன்ல… என்னால் விலகி இருக்க முடியாது என்று.. ஆனால் தற்போது ஓட எனக்கு சக்கரங்கள் தேவை” வீடியோவிற்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பமடைந்த போதிலு தன்னால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்த முடியாது என்பதை அந்த பதிவின் மூலம் சானியா கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவிலும், 2015ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும், அதே ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிலும் சானியா மிர்சா பட்டம் வென்றுள்ளார். அதேபோல், 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும், 2012ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிலும், 2014ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார் சானியா.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-