சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள குறித்த அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில், ஒரே போலீசாரை 4 இடங்களுக்கு அழைத்துச்சென்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளதாகவும், இந்த வன்முறையில் ஈடுபட்ட  17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

உயிர்க்கொல்லி நோயை உருவாக்கி வந்த தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, பேரணியாகச் சென்றனர். அது வன்முறையாக மாறியது. இதையடுத்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பக்கி சூடு நடத்தினர். இதில்,  2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாகவிசாரணை நடைபெற்று வரும நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும்  வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்  ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது. அதைத்தொடர்ந்து, 2018 ஜூன் 4 அன்று விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசம், பல முறை நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 3ஆயிரம் பக்கங்கள் கொண்ட விசாரணை ஆணைய அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்j நிலையில் அருணா ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், துப்பாக்கி சூடுக்கு காரணமாக இருந்த தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும்,  கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள ஆணையம்,  கலைந்து ஓடிய பொதுமக்கள்  மீதும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியின்போது,  எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளதுடன்,  போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல், இது  காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டின்போது, துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடியதாக தெரிவித்துள்ள ஆணைய அறிக்கை,  தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது  உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது என்றும், ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த  போராட்டக்காரர்களை, அங்குள்ளபூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர், போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது  என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், இந்த துப்பாக்கி சூடு எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறியதுடன், துப்பாக்கி சூடு  நடைபெற்றபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த  வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் விசாரணை இன்றுடன் நிறைவு…