ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

சாம் டி ராஜ் இசையில் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில், பத்திரிகையாளர் சு. செந்தில் குமரனின் எழுத, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார் .

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வி இசட் துரையும் கலந்து கொண்டார்.

இது பற்றிய விவரம் பின் வருமாறு,

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற முழக்கத்தின் மூலம் சக மனிதன் மேல் உலகளாவிய நட்பு காட்டிய இனம் தமிழ் இனம் .

விலங்குகளிடத்தில் அதிலும் விவசாயம் மூலம் தனக்கு உதவும் காளை , மாடு உள்ளிட்ட விலங்குகளிடத்தில் அவன் காட்டும் நேசம் கலந்த நன்றியின் நேரிய வடிவமே மாட்டுப் பொங்கல் .

அந்த மாட்டுப் பொங்கலை ஒட்டி தனக்கு வாழ்நாள் முழுக்க உதவும் காளை மாடுகளை கம்பீரப்படுத்தி தானும் கம்பீரப் படுவதற்காக தமிழன் நடத்தும் பண்பாட்டு கலாச்சார வீர விளையாட்டே ஏறு தழுவுதல் , மஞ்சு விரட்டு என்றேல்லாம் அழைக்கப் படுகிற ஜல்லிக் கட்டு

தம்மோடு வளரும் காளை இனத்தின் ஆரோக்கியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது….

தரம் கூட்டப்பட்ட காளைகளின் மூலமாக தரம் கூட்டப்பட்ட பசுக்களை உருவாக்குவது….

தரமான நாட்டுப் பால் உற்பத்தியை பெருக்குவது….

அதன் மூலம் ஜெர்சி பசுக்கள் கொடுக்கும் புற்று நோயை உருவாக்கும் பாலை அருந்தும் நிலைமை நமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுப்பது…..

இவைதான் ஜல்லிக்கட்டின் அடிப்படை நோக்கம் என்பது நிஜமான மூளை உள்ள அனைவருக்கும் தெரியும்; அல்லது சொன்னால் புரியும் .

இனியும் தெரியாதது போல அல்லது புரியாதது போல நடிப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கான சமூக விரோதிகளே .

அந்த சமூக விரோதிகளின் ஒரு பிரிவுதான் காளையை காட்சிப் படுத்தப்படும் வன விலங்குகள் பட்டியலில் சேர்த்து அதன் மூலம் ஜல்லிக்கட்டை அழித்து,
அந்நிய நாடுகள் கொடுக்க இருக்கும் ஆபத்தான பாலை நம் அடுத்த தலைமுறை ககுழந்தைகளை குடிக்க வைப்பதன் மூலம் இன்னும் மூன்று தலை முறைக்குள் ஒட்டு மொத்த இந்தியர்களையும் அழிக்கப் பார்க்கிறது .

இந்த உண்மை தெரியாமல் தமிழினத்தின் மேல் வன்மம் பாராட்டும் பொறாமை பிடித்த மற்ற இந்திய தேசிய இனங்களும், முழு மூடத் தனமாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நல்ல தீர்ப்பு வரும் என்று காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன நிலையில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், மா நிலம் எங்கும் அறவழியில் அறிவுப் பூர்வமாக போராடி வருகின்றனர் .

அந்த அறப் போராட்டத்தில் தங்கள் பங்காக பல்வேறு கலைஞர்களும் கவிஞர்களும் ஜல்லிக் கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக பாடல்கள் உருவாக்குகின்றனர் .

இதன் மகுடமாக ‘இதுதாண்டா ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டுப் பிரச்னையை விளக்கி , நடக்கும் போராட்டத்தை வாழ்த்தும் பாடல் ஒன்று வீரியமாக உருவாக்கப் பட்டுள்ளது .

‘வந்தா மல’ படத்துக்கு இசை அமைத்த சாம் டி ராஜ் இசையில் ,பத்திரிகையாளர் சு. செந்தில் குமரனின் இந்தப் பாடலை எழுத விஜயலட்சுமி , உத்ய , ஷரவன் ஆகியோர் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை தனது இல்லத்தில் இருந்து யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார் டி. ராஜேந்தர் .

நிகழ்வில் பேசிய டி. ராஜேந்தர் “சரியான சமயத்தில் சரியான முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த பாடலை நண்பர் சு செந்தில் நேர்மையான கருத்துகளோடு கூர்மையான சொற்களைப் பயன்படுத்தி எழுதி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

அதற்கேற்ப இசையிலும் அந்த உணர்வை கொண்டு வந்துள்ளார் சாம் டி ராஜ் . அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் .

பாடிய விஜயலட்சுமி , உத்ய , சரவன் மூவரும் சிறப்பாக பாடி உள்ளனர் . வார்த்தைகளை தெளிவாக உச்சரித்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம்.

பாடலில் PETA அமைப்பை நாய் என்று திட்டியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை . . நாய் என்பது காக்கும் கடவுள் . கால பைரவரின் அடையாளம் . அப்படிப்பட்ட பெருமை மிக்க நாய் என்ற வார்த்தையால் திட்டப்படுவதற்கு உரிய தகுதி கூட PETA அமைப்புக்கு இல்லை ” என்றார்.

பரபரப்பான அந்த பாடல் வரிகள் உங்களுக்காக..

தொகையறா

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !
தலையில் எவனும் கைய வச்சா
தவிடு பொடியாக்கடா !

பல்லவி

கொம்பைக் கூர் சீவி
கூருக்கு நேர் நின்னு
தாவிப் புடிப்போமடா !

அம்பா பாய்கின்ற
காளையை வெறும் கையால்
அணைச்சுப் புடிப்போமடா !

எங்க வீட்டுக்குள்
இன்னொரு பிள்ளையென
வாழும் கொலசாமிடா – அத

எப்படி வளக்கனும்னு
எனக்கு சொல்லித் தர
நாயே நீ யாரடா !

ஏறு தழுவுகிறோம்
என்ற வாரத்தையில்
இணையற்ற பண்பாட்டை
புரிஞ்சிக்கடா !

கூறு கெட்ட சில
கோட்டான் கூட்டத்தால
ஜல்லிக்கட்டு ஒரு நாளும்
அழியாதடா !
சரணம் 1
——————

காளை மாடு ஒன்னும் கரடி புலி சிங்கம் இல்ல
கபோதி புரிஞ்சிக்கடா

எங்க உழவனுக்கு எந்நாளும் துணையாகும்
ஜீவன் அதுதானடா !
பழகி விட்டா சிறு பச்ச புள்ள
அடிச்சா கூட அத வாங்கிக்கும்டா

புதுசா வந்து நீ கைய வச்சா
பொரட்டிப் போட்டு கொண்டாடுமடா !

காளைக்கும் தமிழனுக்கும் இருக்கிற பந்தமே
காலத்தை வென்றதொரு வரலாறடா !

ஒழுங்கா குளிக்கவே தெரியாத பயபுள்ளக
எங்கள குறை சொல்லக் கூடாதடா !

சரணம் 2
——————

மாணவ தமிழ்க் கூட்டம் மனசு வச்சு எழுந்தாலே
,மலையும் குழியாகும்டா

கன்யா குமரி முதல் மெரீனா சென்னை வரை
பொங்குது தமிழ் வீரம்டா !

சாதி மத சதி அரசியலால்
பிரிஞ்ச தமிழன் இன்று ஒண்ணா ஆனான்

சூது வாது சொல்லி பிரிச்சு வச்ச
துரோகி எல்லாம் தூள் தூளா போனான் .

இது ஒரு துவக்கமே இனி இல்லை கலக்கமே
எல்லா திசையிலும் வெற்றி நமக்கே

நட்புக்கு வணக்கமே பகைவனை அழிக்குமே
புதுசா பொறந்திருக்கும் இளைஞர் இயக்கமே !

பாடலைக் கேட்க / காண

https://www.youtube.com/watch?v=Ehzj1q3lIUs