சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் வர நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை நீக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதினரும் செல்ல அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
அதற்குப் பிறகு ஏற்கனவே இருமுறை கோவில் நடை திறக்க்கப்பட்டது. இரு முறையும் இளம்பெண்கள் கோவிலுக்கு வரக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் திருப்பி அனுப்பபடனர்.
இந்நிலையில் 62 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று கடும் பரபரப்புக்கிடையில் சபரிமலைக் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.