புதுடெல்லி:
2023 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினாராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழின் பேரில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி வரும் 2023-ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து நாட்டை சேர்ந்த அதிபர் பங்கேற்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா மற்றும் எகிப்து நாடுகள் இடையே நல்லுறவு, 75-ஆண்டுகால தூதரக ரீதியான உறவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.