டாலருக்கு ரூபாய்: எந்த பிரதமர் ஆட்சியில் எவ்வளவு?

நெட்டிசன்:

இதுவரை இல்லாத அளவு, டாலகுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இன்று வரையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு எந்த பிரதமர் ஆட்சியில் எவ்வளவு?

ஏழுமலை வெங்கடேசன் அவர்களது முகநூல் பதிவு:

நாடு சுதந்திரம் அடைந்த 1947.. ஒரு யூஎஸ் டாலர் ஒரு ரூபாய்.. 17 வருஷம் நேரு தொடர்ந்து ஆண்டுட்டு போனபோது 1964ல், டாலர் மதிப்பு 4.76 ரூபாய்

அடுத்து வந்த லால் பகதூர் சாஸ்திரி ரெண்டே வருஷத்தில், 6.36க்கு கொண்டுபோனாரு..

அப்புறம் இந்திராகாந்தியின் 1966-1976 காலத்துல 6.36 ரூபாயிலிருந்து டாலர் மதிப்பு 8.96க்கு போச்சு. பத்து வருஷத்துல சுமார் ரெண்டரை ரூபாய் கூடிச்சி

மொரார்ஜி தேசாய் தான், இந்திராவிட்டுட்டுபோன 8.96லிருந்து ரெண்டரை வருஷத்துல 8.13 க்கு இறக்கி விட்டாரு..மொரார்ஜி மட்டும்தான் யூஎஸ் டாலர் மதிப்பை போகும்போது இறக்கிவிட்டுட்டு போனவரு.

அப்புறம் மறுபடியும் இந்திரா ஆட்சி. 1984ல் அவர் கொல்லப்படும்போது டாலர் மதிப்பு 11.36 ரூபாய்.

ராஜீவ்காந்தி அஞ்சு வருடம் ஆண்டு முடிக்கும்போது 16.13 ரூபாய்,

விபிசிங் காலத்தில் ஒரு டாலர் 17.5 ரூபாய்

நரசிம்மராவ் அஞ்சு வருஷம் ஆண்டு முடிக்கும்போது ஒரு டாலர்.. அவரது காலத்தில் இரண்டு மடங்குக்கு மேலே ஏறியது..

அப்புறம் வாஜ்பாய் 1999ல் வந்து 43.06க்கு கையில வாங்கி அஞ்சு வருஷம் முடிஞ்சி 2014ல் போகும் போது 46.58க்கு மன்மோகன்சிங்கிடம் குடுத்துட்டு போனாரு..

அப்புறம் மன்மோகன்சிங் பத்து வருஷம் போகும் போது ஒரு அமெரிக்க டாலர்..அதான் நம்ம தலைவன் நரேந்திர மோடி பிரதமராய் பதவியேற்ற அன்று 26.06.2014..ஒரு டாலர் 58.65 ரூபாய்..

அதே மோடி ஆட்சியில் இன்று 71 ரூபாய்!

Tags: rupees for dollar:  how much value in which prime ministers, டாலருக்கு ரூபாய்: எந்த பிரதமர் ஆட்சியில் எவ்வளவு?