நியூஸ்பாண்ட்:
பாலி திரைப்படம் உருவாக ஆரம்பித்த காலகட்டத்திலிருந்தே  படத்தைப் பற்றி பலவித வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அதுவும் பட ரிலீஸ் நெருங்க, நெருங்க உச்சகட்டத்தை எட்டின வதந்திகள்.
6
அதில் ஒன்று, “கபாலி படத்துக்கு டிக்கெட் கிடைக்காததால் மலேசியாவில் தமிழ் வாலிபர் கட்டிட உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்” என்பது. இந்த குறிப்போடு ஒரு இளைஞர் ஷாப்பிங் மால் மாடியிலிருந்து கீழே விழும் காட்சியும், விழுந்த அவரை மருத்துவமனைக்கு ஸ்டெக்சரில் தூக்கிச் செல்லும் காட்சியும் இருந்தன. இந்த காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இந்த “செய்தியை” நம்பி பலரும் அந்த “ரசிகரை” வசைபாடவும் செய்தார்கள். அனுதாபம் தெரிவித்தவர்களும் உண்டு.
ஆனால் அந்த தற்கொலை சம்பவம் நடந்தது சீன நாட்டில். அது நடந்து ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டன். காதலியுடன் ஏதோ தகராறு.. அதனால் தற்கொலை செய்துகொண்டான். அந்த இளைஞருக்கும்  கபாலிக்கும் ஸ்னான பிராப்தியே கிடையாது.
ஆனால் இந்த வதந்தியால்,கபாலி பற்றிய பேச்சு்க்கள் இன்னும் கூடுதலாகின.

ரஜினியுன் ஆன்மிக பேச்சுவார்த்தை நடத்திய "இளவரசி"
ரஜினியுன் ஆன்மிக பேச்சுவார்த்தை நடத்திய “இளவரசி”

இன்னொரு “ சம்பவம்.” ரஜினி தாய்லாந்து சென்றபோது, அங்குள்ள மூன்று இளவரசிகளில் ஒருவரான மாம் லுயாங் ராஜதரஶ்ரீ ஜெயன்குரா …  என்பவர் ரஜினி பற்றியும், அவரது ஆன்மிக ஞானம் பற்றியும்  அறிந்து அவரை ஆர்வத்துடன் வரவேற்றதாகவும்… மணிக்கணக்கில் ரஜினியுடன் ஆன்மிக பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவலை கபாலி பட தயாரிப்பாளர் மீடியாவிடம் தெரிவித்தார்.
உடனே, “ரஜினியை வியப்போடு வரவேற்ற, பேசி மகிழந்த, பாராட்டித்தள்ளிய தாய்லாந்து இளவரசி” என்ற தலைப்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
ஆனால் எனது தாய்லாந்து நண்பர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் சொன்ன விசயம் அதிர்ச்சி அளித்தது.
” தாய்லாந்து அரசருக்கு நிறைய மனைவிகள். நிறைய வாரிசுகள்.  இந்த அரசரின் அப்பா அரசரும் அப்படித்தானாம். ஆகவே அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் தங்களை இளவரசி என்று அழைத்துக்கொள்வார்கள். அதாவது நம்ம ஊரில் தடுக்கி விழுந்தால் நாலைந்து “கலைமாணிகள்” இருக்கிறார்கள் அல்லவா.. அப்படித்தான்.
அதிகாரபூர்வ இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன், இந்தியா வந்தபோது
அதிகாரபூர்வ இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன், இந்தியா வந்தபோது

தவிர  தாய்லாந்து நாட்டின் ஒரிஜினல் இளவரசி.. மஹா சக்ரி சிரிந்தோரன் (Maha Chakri Sirindhorn) என்பவர்தான். இவர் தாய்லாந்து நாட்டின் அதிகார பூர்வ தூதராக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர். இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்” என்றார்கள் தாய்லாந்து நண்பர்கள்.
நூற்றுக்கணக்கான இளவரசிகள் இருக்க.. மூன்று இளவரசிகளில் ஒருவர் ரஜினியை வரவேற்றார் என்று தாணு எப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை!
இதற்கிடையே கபாலி படத்தில் ரஜினி அறிமுகக் காட்சியை  தில்லாலங்கடி திருட்டு வீடியோகாரர்கள், இணையத்தில் உலவ விட்டார்கள் என்று ஒரு பரபரப்பு.
"கபாலி"க்கு லீவு விட்ட நிறுவனம் ஒன்றின் அறிவிப்பு
“கபாலி”க்கு லீவு விட்ட நிறுவனம் ஒன்றின் அறிவிப்பு

அடுத்ததாக.. (இதை சொன்னவர், நமது ரவுண்டஸ்பாய்)
ஏதேதோ நிறுவனங்கள் எல்லாம் சமூகவலைதளங்களில், “கபாலி ரிலீஸ் ஆகும் 22ம் தேதி எங்கள் நிறுவனங்களுக்கு விடுமுறை” என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றன. அதில் சிலவற்றின் பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த பேஸ்புக் அல்லது ட்விட்டர் அக்கவுண்ட்டை ஆரம்பித்த சில நிமிடங்களில் இப்படி “கபாலி லீவு” செய்தியை பதிவிட்டிருப்பது தெரிகிறது. சிலவற்றில் முகவரி இல்லை.
“பட ரிலீஸின் போது இப்படி வந்தியை பரப்புவது, படத்தைப் பற்றி பேச வைக்கும் உத்தியா” என்ற கேள்வியையும் சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பி வருகிறார்கள்.
இறைவா.. என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.. “கபாலி” வதந்தியிலிருந்து மட்டும் நீ என்னை காப்பாற்று!