சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக காத்திரும் நிலையில், ஐ.லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகத்தி  குழுவினர்,  தமிழக அரசின் 6வது வகுப்பு கணித பாட நூலில் ரம்மி தொடர்பான பாடத்தை சேர்த்திருந்தனர். இது  கடுமையான வவிமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து,  அடுத்த கல்வியாண்டு முதல் 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தது, பள்ளி கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்கள்  செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திமுக பேச்சாளார்  ஐ. லியோனி நியமிக்கப்பட்டார். அவர் பாடநூல் கழக தலைவராக பதவி ஏற்றது முதல், மாணாக்கர்களின்  பல பாடங்கள் நீக்கப்பட்டு, டிராவிட சிந்தாந்தகங்கள் சேர்க்கப்படுகிறது. மத்திய அரசு என்று இருப்பதை  ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் பரவலாக அவர்கள் ஏற்றுக்கொள்ள விரைவில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக,  தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் மூன்றாம் பருவத்துக்கான கணிதப் பாடத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்பது குறித்து விவரிக்கும் பாடமும் இடம்பெற்றுள்ளது.

அதாவது, 6-ம் வகுப்பு கணித பாடத்திட்டத்தின் மூன்றாம் பருவத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் முழு எண்களை விளக்கும் உதாரணத்திற்காக ரம்மி விளையாடுவது எப்படி என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.  திண்டுக்கல் லியோனி கூறும்  மாற்றம் இதுதானா என கல்வியாளர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையாக கேள்வி எழுப்பினர். மேலும்,  பொதுமக்கள், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமான உயிர்கள் பலிபோன நிலையில், அதை தடுப்பதாக கூறிக்கொண்டு, குழந்தைகளின் மனதில் நச்சை தோற்று விக்கும் வகையில், ரம்மி விளையாடுவது எப்படி என்பது பாடத்தில் கொண்டு வரப்பட்டது திமுக அரசின் நடவடிக்கை கேலிக்குறியதாக்கியது.

தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு மாணவர்களை ரம்மி விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆனால், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையோ, மாணவர்களுக்கு எண்கள் குறித்து தெளிவாக விளக்கவே கணிதப் புத்தகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக சப்பைக்கட்டு கட்டி வந்தது.

அதேசமயம், இதனை படிக்கும் மாணவர்கள் வீட்டில் படிப்பார்களா? அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட நினைப்பார்களா? என்பதுதான் கேள்வி. மற்ற மாநிலங்களில் வேறு பொருட்களை உதாரணமாக வைத்து பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ரம்மி விளையாட்டை வைத்து பாடத்திட்டம் எப்படி தயாரிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆகவே, கல்வியாளர்களும், பெற்றோர்களும் சீட்டு பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பெண்களின் இடுப்பு பற்றி ஆராய்ச்சி நடத்திய லியோனியையும், திருமணம் கடந்த உறவு என்கிற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த சுப.வீரபாண்டியனையும் வைத்திருந்தால் பாடத்திட்டத்தின் லட்சணம் இப்படித்தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்கள். மேலும், சிலர் ஓகோ இதுதான் திராவிட மாடல் பாடத்திட்டமோ என்றும் நக்கல் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே அன்புமணி ராமதாஸ், பாஜகவை  சேர்ந்த எச்.ராசா போன்றோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி  அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திண்டுக்கல் லியோனி மற்றும் அவரது தலைமையில் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் கழக  கல்வியாளர்களின் குழுவினரின் சாயம் வெளுத்துப்போய்விட்டது.