ராஜஸ்தான்: பா.ஜ.க அரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

Must read

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஆட்சி செய்துவரும் பாரதியஜனதா அரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

விவசாயிகள் பிரச்சினையில் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக   ஆர்எஸ்எஸ் விவசாயப் பிரிவு சார்பாக ஜூன் 15 முதல் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

பாரதியஜனதாவின் விவசாய பிரிவான பாரதீய கிசான் சங்கம்  (பி.கே.எஸ்), ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா அரசுக்கு எதிராகவே போராட்டம் நடத்த முனைந்துள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசாங்கத்தின் “விவசாயிகள் – எதிர்ப்புக் கொள்கைகளுக்கு” எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு  பிகேஎஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களும் பங்குகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

விவசாயிகள் பிரச்சினை குறித்து,  விவாதிக்க விதான சபாவின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்க வேண்டும், பண்ணை இணைப்புகளை வழங்க மின்சக்தி கொள்கையை திருத்த வேண்டும், மரபணுமாற்ற  GM கடுகு விதைகளை பயிரிட வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல்; பால் உற்பத்திக்கு  போனஸ் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து, பி.கே.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளர் ராம் குமார் நாகர் கூறியதாவது,

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தோ, அவர்களின்  மனவேதனை பற்றியோ அரசாங்கம் கவலைப்படுவதாக தெரியவில்லை. விவசாயிகள் பிரச்சினையில் அரசின் அணுகுமுறை சரியல்ல.  புதுவகையான மரபணு மாற்ற விவசாயத்தையே  கட்டாயப்படுத்துவதாகவே உள்ளது.

 “இது தேசத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு நல்ல அறிகுறி அல்ல” என்று கூறினார்.

“அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் விவசாயிகளுக்கு எதிரான போக்கு காரணமாக தற்போது மாநில விவசாயிகள் பிச்சைகாரர்களாகிவிட்டனர்” என்றும்,

கடன் மற்றும் பிற பொருளாதார சுமைகள் காரணமாக நூற்றுக்கணக்கான விவசாயிகள்  தற்கொலை செய்துகொண்டுள்ளனர், மாநிலத்தில் விவசாயத்தை நம்பி வாழும் ஏழைகளின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கிறது,” என்று பி.கே.எஸ் துணைத் தலைவர் ராத்தோர் கூறினார். .

பி.கே.எஸ் அஜ்மீர் மாவட்ட தலைவர் ராமேஷ்வர் பிரசாத் ஷர்மா கூறும்போது,

மாநிலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (ஜிஎம்) கடுகு விதைகளை ஊக்குவிப்பது வருமானம் மற்றும் உற்பத்தியில் விவசாயிகளுக்கு மோசமாக பாதிப்பை ஏற்படும் என்றும், இதன் காரணமாக

 “கடுகு வளரும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடும் பாதிப்புக்கு தள்ளப்படுவார்கள்,” என்று கூறினார்.

விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கூட கிடைக்கவில்லை என்று அமைப்பு உறுப்பினர்கள் கூறினர். “நாகௌர் மற்றும் பிகானெர் நகரங்களில் 1.5% மட்டுமே உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்று பிகேஎஸ் உறுப்பினர் ரகுவிர் சிங் ஷெகாவத் கூறினார்.

தர்ணா போராட்டத்தின்போது  இந்த அமைப்புகள்  ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது,

ஆளும் பாரதியஜனதா அரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் விவசாயிகள் பிரச்சினையில் திரண்டிருப்பது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article