டில்லி:

விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் 14.5 கோடி குடும்பங் களுக்கு விரிவாக்கம் செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

மோடி தலைமையில் பதவி ஏற்ற புடிதிய மத்திய அமைச்சரவை  கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு சலுகைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,  விவசாயி களுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவுபடுத்தவும், சிறு வனிகர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில்,  சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் விரிவாக்கமாக அனைத்து விவசாயி களுக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

5 கோடியே 77 லட்சம் விவசாயிகளுக்கு 2 கட்டங்களாக பணம் கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது, 5 ஏக்கர் என்ற வரம்பை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயி களுக்கு ஆண்டிற்கு ரூ6 ஆயிரம் வழங்கும் திட்டம் 14.5 கோடி குடும்பங்களுக்கு விரிவாக்கம் செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும்,  இந்த திட்டத்திற்காக ரூ87,000 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.