சென்னை

திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ..5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வைரலானது.   இதில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில்  தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொற்றைப் பரப்பும் விதமாகச் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி சிறையிலுள்ள அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஜெயக்குமார் தரப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி ஜாமீன் கோரிய நிலையில் வழக்கின் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் தர மறுத்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தற்போது ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயக்குமார், அவர் மகள் ஜெயப்ரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மீது மகேஷ் என்பவரிடமிருந்து ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக 6 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.