பெட்ரோல், டீசல் வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.11 லட்சம் கோடி வருவாய்…காங்கிரஸ்

புவனேஸ்வர்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயராத நிலையிலும் இந்தியாவில் இதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டிவிட்டது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலை மாறி தற்போது 71 ரூபாயை தாண்டிவிட்டது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் ரூ. 11 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் விளம்பர கமிட்டி உறுப்பினருமான பக்தா சரண் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2014ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு ஒரு பேரல் 107.09 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது நாங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை 71.41 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 55.49 ரூபாய்க்கும் விற்பனை செய்தோம்.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 77.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது சரியா? மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மூலம் ரூ. 11 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது’’ என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rs 11 lakh crore revenue for central government through petrol and diesel taxes says Congress, டீசல் வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.11 லட்சம் கோடி வருவாய்...காங்கிரஸ், பெட்ரோல்
-=-