ஜெயலலிதா மரணம் : அப்போலோ மருத்துவமனை ஆய்வு திடீர் ரத்து.

சென்னை

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் இன்று அப்போலோ மருத்துவமனையில் நடைபெற இருந்த ஆய்வு திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணயம் விசாரித்து வருகிறது.    இதற்காக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கபட்ட மற்றும் அவர் தங்கி இருந்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய ஆணையம் உத்தரவிட்டது.   அதற்காக வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் நியமிக்கப்பட்டனர்.

இன்று நடைபெற இருந்த இந்த ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணயம் உத்தரவிட்டுள்ளது.    மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் ஆய்வுக்குத் தேவையான ஏற்பாடுகள் உடனடியாக செய்ய முடியவில்லை எனவும் வேறொரு நாளில் ஆய்வு நடத்த வேண்டுகோள் விடுக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.    மருத்துவ மனையின் வேண்டுகோளை ஏற்ற ஆணயம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: review at Apollo hospital for Jayalalitha death is postponed
-=-