கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் நியமனம்

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க மதுரை, கோவையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

 

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பலவற்றில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

கோயில் சிலைகள் மற்றும் நகைகள் கொள்ளைபோவதாகவும், கோயில் நிலங்களை பலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், கோயிலுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை மிகக் குறைவாக இருப்பதோடு அதையும் தராமல்  பலர் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளில்  கோவில்களுக்கு சொந்தமான 6,035.15 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 70 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பட்டா மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Revenue officers appointed to save lands owned by temples, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் நியமனம்
-=-