மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

இன்று கூடிய தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் மேகதாது குறுக்கே அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயன்று வருகிறது. அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேகதானு அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

assembly

இதனை தொடர்ந்து கர்நாடக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதி வழக்கை தொடர்ந்தது. இது ஒருபுறம் இருக்க மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென எதிர்கட்சியான திமுக கோரிக்கை விடுத்தது.

அதன்படி தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் பேசிய எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் கஜா புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் மேகதாட்டு விவகாரம் எழுந்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காவிாி நீரை தேக்கக் கூடாது என்று நடுவா் மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மத்திய நீா்வள ஆணையரே காவிாி மேலா்ணமை ஆணையத்தின் தலைவராக செயல்படுவதால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து முன்பே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாட்டு குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து முதல்வா் பழனிசாமி ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று குறிப்பிட்டு தீா்மானத்தை வாசித்தாா். அதில் ” மேகதாது அணை தொடர்பான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசின் அனுமதியை திரும்ப பெற வேண்டும் “ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தின் இசைவின்றி கர்நாடக அரசு அணைக்கட்டக் கூடாது என மத்திய அரசு உத்தரவிடக் கோரிம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தினகரன், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட பலர் ஆதரவளித்தனர். இதனை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-