தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கபட உள்ள பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வருடா வருடம் தமிழ்நாடு போக்குவர்த்துத் துறை தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகின்றது. இந்த வருடம் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்ற ஆண்டு தீபாவளி சமயத்தில் அரசு பேருந்துகளில் சுமார் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், “தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3.4 மற்றும் 5 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன. இந்த பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக சென்னையில் 30 சிறப்பு முன்பதிவு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் 26 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும்.

இன்னும் தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் வசூலிக்க உள்ள கட்டன குறித்து ஏதும் முடிவு செய்யப்படவில்லை. இத்தகைய ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Reservation for Deepavali special buses will start from Nov 1 st : Transport Minister
-=-