சென்னை: சொமேட்டோ மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை இந்திக் கற்றுக்கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று சோமேட்டோ கேர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து  சோமேட்டோவுக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள், சொமேட்டோவை புறக்கணிக்கும்பேடி சமூக வலைதளங்களில் டிரோல் செய்து வருகின்றனர்.

சோமேட்டோ அம்பாசிடரான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.   இதையடுத்து, சோமேட்டோ நிர்வாகம் தனது தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.

இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருந்துவருகின்றன, சில பகுதிகளிலும் ஸ்விக்கியும், பல பகுதிகளில் சோமேட்டோ நிறுவனங்களும் ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், ஆன்மூலம் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவரது ஆர்டர்  முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

இந்த விவாதத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே மொழி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாக  சொமோட்டோ நிறுவனத்திடம்,   தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ்மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த சொமோட்டோ நிறுவன அதிகாரி,  இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனால் கோபமடைந்த விகாஷ்,  இதனை படமாக எடுத்து விகாஷ் சமூகவலைதளங்களில் பதிவிட, அதை வைரலானது.  சொமேட்டோவின் செயலுக்கு  திமுக எம்.பி. உள்படெ பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சொமட்டோ நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில்  #regectzomato என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெரெண்டாகிவருகிறது.

மேலும் பலர், சொமட்டோ நிறுவன அம்பாசடர் பாடகர் அனிருத் உடனே தனது அம்பாசடர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.

தமிழர்களை தரக்குறைவாக விமர்சித்த சொமட்டோவுக்கு எதிராக  அனிருத் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?

தமிழர்களின் கடும் எதிர்ப்பினால்  அதிர்ச்சி அடைந்த சொமோட்டோ நிறுவனம் தவறுக்கு விளக்கம் தெரிவித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளின்சேவை முகவரின் நடவடிக்கைக்கு வருந்துகிறோம், அவரை பணி நீக்கம் செய்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்தை பகிரக்கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

தாங்களின் மாநிலத்தின் நிலைப்பாட்டை கருதியே, பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தை உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்துள்ளதாகவும்,  உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.